மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்? Senior Citizen Savings Scheme In Tamil.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக அளவாகச் சுமார் 7.4 சதவீத வட்டி அளிக்கப்படுகின்றது. இந்திய அரசாங்க விதிகளின்படி NRI மற்றும் HUF போன்றோர் இந்த மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை திறக்க இயலாது. இத்தகைய திட்டங்களில் முதிர்வு காலம் மூன்று முதல் ஐந்து வருடங்களாக இருக்கின்றது. நாம் இப்பொழுது இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.

நம்முடைய இளமைக்காலம் 
முழுவதும் கஷ்டப்பட்டுச் சேமித்த நிதியை மிகவும் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். பொதுவாக மூத்த குடிமக்களுக்கான முதலீடு என்பது பாதுகாப்பு மிகுந்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பு அம்சத்தைக் கணக்கில் கொள்ளும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் வருவாயும் மிகக் குறைவாக இருக்கும். 

எனினும் இந்திய அரசாங்கம் முத்த குடிமக்களுக்குப் பல்வேறு நிதிச் சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்தியாவில், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கு 0.5 சதவீதம் அதிகமான வட்டி வழங்கப்படுகின்றது. இதைத் தவிர்த்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் மூத்த குடிமக்கள் அல்லது பிற வகைகளில் வருவாய் ஈட்டும் மூத்த குடிமக்கள் முன்கூடியே வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறுவதற்கான சரியான‌ திட்டமிடல் | Proper Planning For Retirement.

நாம் அனைவரும் நம்முடைய எதிர்காலத்திற்காகச் சேமிக்கின்றோம். சேமிப்பதற்காகத் திட்டமிடுகின்றோம். இத்தகைய நிதித் திட்டமிடல்கள் பணத்தைச் சேமிப்துடன் நின்று விடாமல், அதைப் பாதுகாப்பாகப் பலமடங்கு பெருக்கவும் செய்ய வேண்டும். அதிலும் நாம் நம்முடைய ஓய்வு காலத்திற்காகச் சேமிக்கும் பொழுது மிகச் சரியாகத் திட்டமிட வேண்டும். ஓய்வு கால நிதி திட்டமிடலை நாம் நம்முடைய மத்திய வயதில் அதாவது 30 முதல் 40 வயதிற்குள் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய ஓய்வு காலத்திற்குத் தேவையான நிதி நம்மிடம் சேமிப்பாக இருக்கும்.

                    
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்:

60 வயதை அடைந்த தனிநபர்கள் எவரும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு புதிய கணக்கைத் திறக்க இயலும். இந்தக் கணக்கை திறக்கப் படிவம் A- வை பூர்த்திச் செய்து அதனுடன் கணக்கு துவங்கும் ஒரு விண்ணப்பப் படிவம் மற்றும் 60 வயதை பூர்த்தி செய்ததற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் பொழுது ரூ 1000 அல்லது அதனுடைய மடங்காகப் பணத்தை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.

 ஒருவருடைய வயது 60க்கு குறைவாகவும் 55 வயதிற்கு அதிகமாகவும் இருந்தாலும் அவரால் இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்க இயலும். எனினும் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

 ஒரு நபர் இந்தத் திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கை திறக்க இயலும். எனினும் இந்தத் திட்டங்களில் செய்யப்படும் மொத்த முதலீடு ரூ 15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓய்வு காலத்தை பாதுகாக்க  செய்ய வேண்டியது என்ன | What Needs To Secure Retirement Details In Tamil.

வட்டி விகிதங்கள்: 

இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் கணக்கிற்கு, அந்த கணக்கு திறக்கப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 7.4 சதவிகித வட்டி வழங்கப்படுகின்றது. வட்டி ஒவ்வொரு காலாண்டின் இறுதியில் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31, தேதிகளில் வழங்கப்படுகின்றது.

 எனினும் இந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில், இந்த கணக்கிற்கு கூட்டு வட்டி கிடையாது. சாதாரண வங்கி கணக்கிற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகின்றது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் நன்மைகள்: 

• இது அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டம் என்பதால், இது பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு விருப்பமாகும்.

• கணக்கு திறக்கும் செயல்முறை எளிதானது. இது இந்தியா முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலும் திறக்கப்படலாம். 

• கணக்கு திறக்கும் நேரத்தில் நியமன வசதி உள்ளது. படிவம் C - இன் விண்ணப்பத்தை ஒருவர் கிளைக்கு அனுப்ப வேண்டும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு பரிந்துரை செய்யப்படலாம்.

•  SCSS கணக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத நல்ல வருவாயை வழங்குகிறது (வட்டி விகிதம் 2020 அறிவிப்புகளின்படி) 

• இத்திட்டம் திறமையான வரி சலுகைகளை வழங்குகிறது. 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கோரப்படலாம்பிரிவு 80C இந்திய வரிச்சட்டம் 1961. 


தேவையான ஆவணங்கள்:

1 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், இது Post Office அல்லது வங்கியில் கிடைக்கும்.

2. உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (KYC) படிவம்

3. விண்ணப்பதாரரின் 3 புகைப்படங்கள்

4 நிரந்தரக் கணக்கு எண் (PAN)

5 ஆதார்

6 முகவரிக்கான ஆதாரம்

7 வயதிற்கான ஆதாரம்

8. ஓய்வு பெற்றவர்களின் விஷயத்தில், அவருடைய முதலாளியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ். அந்தச் சான்றிதழில் ஓய்வு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வருமான வரி சலுகை: 

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C (Section 80C) மூலம் வரிச்சலுகையும் கிடைக்கும். வட்டியாகக் கிடைக்கும் பணம் 10,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், வருமான வரி பிடித்தம் (TDS) செய்யப்படும்.  இந்தியாவில் வரி சேமிப்பு திட்டங்கள் என்ன Tax Savings Plan In India.


இடைநிறுத்தம்: 

தேவைப்பட்டால் ஓராண்டுக்குப் பின் கணக்கை முடித்துக்கொள்ளலாம். ஆனால் டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக்கொள்ளப்படும். 2 ஆண்டு ஆண்டுகளுக்குப் பின் கணக்கை முடித்துக்கொண்டால் 1% கழித்துக்கொள்ளப்படும்.

 பணத்தைத் திரும்ப எடுப்பதற்கான வரம்புகள்:

கணக்கைத் திறந்த பின்னர் ஒரு வருடம் கழித்தே, நம்மால் பணத்தைத் திரும்ப எடுக்க இயலும். எனினும் இவ்வாறு பணத்தைத் திரும்ப எடுக்கும் பொழுது அதற்குரிய அபராதத்தைச் செலுத்த வேண்டும்.

கணக்குதாரர் இறந்தால்: 

கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராமல் இறந்தால், அந்தக் கணக்கு உடனடியாக மூடப்படும். வாடிக்கையாளர் சமர்ப்பித்த படிவம் எப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுதாரர் அல்லது சட்டப்படியான வாரிசுதாரர்களுக்கு அந்தக் கணக்கில் உள்ள தொகை வழங்கப்படும்.

முதிர்வு: 

கணக்குத் திறந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் முடிந்தபின், எழுத்துமூலமான விண்ணப்பத்துடன் சேர்த்து, கணக்குப் புத்தகம், படிவம் E ஆகியவற்றைச் சமர்ப்பித்து முதிர்வு தொகையைத் திரும்பப் பெறலாம்.

பிற வசதிகள்: 

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் மற்றொருவரை Nominee இணைக்கலாம். கணக்கு தொடங்கும் போதோ அல்லது தொடங்கிய பின்னரோ இதனைச் செய்ய முடியும். ஒரு வாடிக்கையாளரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை கையாள முடியும். ஒரு தபால் நிலையத்தில் தொடங்கிய கணக்கை மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.