நமக்கான பொருளாதார திட்டமிடல் என்பது நமது சேமிப்பு கடன்கள் முதலீடுகள் காப்பீடு சொத்துக்கள் மற்றும் மூலதனத்தை பாதுகாப்பது மற்றும் அதிகரிப்பதே திட்டமிடல் ஆகும். ஒரு நல்ல நிதி திட்டமிடல் என்பது இலக்குகளை அடைவது அதற்கான உத்திகளை நிர்ணயம் செய்வதாகும்.
இலக்குகளை அடைவது( Set a goal)
நீங்கள் விரும்புவதை அடைய முதலில் அதற்கான இலக்குகளை நாம் நிர்ணயம் செய்ய வேண்டும். 5 ஆண்டு திட்டம் பத்து ஆண்டு திட்டம் என்று திட்டந்களை நாம் அடுக்கலாம். ஆனால் உண்மையில் நம்முடைய திட்டம் நீண்ட கால திட்டமாக இருந்தால் தான் நம் முதலீடு செய்யும் தொகை குறைவாகவும் முதலீட்டு லாபம் அதிகமாகவும் கிடைக்கும். குழந்தைளின் கல்லூரி செலவு அவர்களின் திருமணம் ஓய்வுகால நிதி போன்ற குறிக்கோளுடன் கூடிய நிதி திட்டமிடல் தான் நம் இலக்குகளை அடைய உத்வேகத்தை தரும்.
பணம் எங்கு செல்கிறது என்று அறிக
உங்கள் மாதாந்திர செலவினங்களை அடையாளம் காணுங்கள். பணம் எங்கு செல்கிறது என்று விரிவான திட்டத்தினை துல்லியமாக கவனமுடன் ஆராயுங்கள்.
திட்டமிடலில் 50:30:20
மாத வருமானத்தில் 50% வீட்டு வாடகை வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துதல் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றிற்கு செலவிடுதல். மீதம் 30% குடும்ப பொழுதுபோக்கு உணவு உடைகள் போன்றவற்றிற்கு செலவிடலாம்.
20% இது தான் நம் இலக்குகளை அடைய பயன்பட உதவும் தொகையாகும். மாத வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருப்பது தான் சிறந்த திட்டமிடலாகும்.
அவசரகால நிதியினை பராமரிப்பது
நிதி திட்டமிடலின்அடிப்படை பகுதி அவசரகால நிதியாகும். இத்தொகையானது தீடீர் மருத்துவ செலவு கார் பழுது பார்ப்பு செலவு ஆகியவற்றிற்கு உதவும். இத்தொகையானது மாத வருமானத்தை போல ஆறு மடங்கு தொகையை வங்கியில் இருப்பு வைப்பது அவசியமாகும்.
முதலீடுகள் மீதான கவனம்
நாம் செய்யும் முதலீடுகள் நீண்ட கால அளவில் இருக்கும் பொழுது கண்டிப்பாக நாம் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடுகளை ஆராய்வது முக்கியமாகும். #Mutual Fund போன்ற திட்டங்களில் முதலீடுகள் செய்தால் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்வது முக்கியமாகும்.
சேமிப்பு ( #Investment )
திட்டமிடலின் மிக முக்கியமானது சேமிப்பு ஆகும். முதல் செலவு சேமிப்பு என்ற கொள்கையை கொண்டு இருந்தால் எதிர்கால கனவுகளை பற்றிய கவலைகளை மறந்து நம் அன்றாட வேலைகளை ஈடுபடலாம். சேமிப்புகளில் நாம் இருவகையான நடைமுறைகளை கையாள்வது முக்கியமாகும்.
1.) வங்கி சார்ந்த முதலீடுகள்
நாம் முதலீடு செய்யும் செய்யும் தொகையில் 60% பாதுகாப்பான நிரந்தர வருமான தரும் திட்டத்தில் முதலீடு செய்வதே சிறந்த திட்டமிடல் ஆகும். இதில் வங்கி நிரந்தர வைப்புகள் ( FD )தொடர் வைப்புகள் ( RD) போன்றவை முக்கியமானதாகும்.
2.) பங்கு சார்ந்த முதலீடுகள்
பங்கு சார்ந்த முதலீடுகள் என்று வரும் போது பங்கு சந்தை மீதான அறிவு அல்லது தெளிவு இருக்கும்பட்சத்தில் பங்கு முதலீட்டில் நாம் துனிந்து இறங்கலாம். ஆனால் அதற்கான புரிதல் இல்லை என்றால் லாபத்தை எதிர்பாக்க முடியாது. பங்கு முதலீட்டில் இருவகையான முதலீட்டு வழிகளை பின்பற்றலாம். ஒன்று நேரடி பங்கு வர்த்தகம் Equity Stock Market மற்றொன்று Mutual Fund ஆகும்.
Mutual Fund-ல் முதலீடுகளில் நாம் index Fund -யை நீண்ட கால அளவுகளுக்கு ( 10 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை )முதலீடு செய்யும் பொழுது நாம் எந்த வித பயம் இன்றி குறைந்தது 10% முதல் 12% வரை இலாபத்தினை அடையலாம்.
3.) PPF ( Public provident fund )
பொது வருங்கால வைப்பு நிதியானது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும் ஒரு நீன்ட கால முதலீட்டு திட்டமாகும். அரசு ஆதரவுடைய PPF திட்டமானது பாதுகாப்பானது மற்றும் வரிச்சலுகைகள் கிடைக்க கூடிய திட்டமாகும். PPF கணக்கை வங்கி கணக்கின் internet banking மூலம் வீட்டிலிருந்தே தொடங்களாம். இதற்கான ஆண்டு வட்டி 7.6% முதல் 7.9% வரை மாறுபடும். இதில் ஓருவர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும் இந்த கணக்கை தொடங்களாம். இந்த திட்டமானது நீன்டகால திட்டமாகும். நாம் செலுத்தும் தொகை 15 ஆண்டுகள் களித்துதான் முதிர்ச்சியடையும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இன்றய காலத்தில் சிறு காய்ச்சல் என்றால் கூட நாம் இரு நாட்களுக்கு இரண்டு மாத ஊதியத்தினை செலவு செய்து மருத்துவ சுற்றுலா செல்ல வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் மருத்துவ காப்பீட்டை கண்டிப்பாக கொண்டிருக்க வேண்டும்.
பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு Family insurance வழங்குகின்றன. ஆனால் சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சொந்த சிறு தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக அரசின் காப்பீடு அல்லது தனியார் காப்பீடு போன்றவற்றை எடுத்து வைப்பது முக்கியமாகும்.