PPF Account என்றால் என்ன? How To Open PPF Account In Tamil

PPF அல்லது பொது வருங்கால வைப்புநிதி என்பது இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமாகும்.  நிரந்தர வேலை செய்பவர்களுக்கு எப்படி PF போன்ற திட்டங்கள்  உள்ளதோ அதே போல் தனிநபர்கள் பயன்பெற இந்திய அரசு இந்த PPF திட்டத்தினை கொண்டுள்ளது.  இதில் ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கில் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இந்திய அரசால் வட்டி தொகை நம் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தன் முக்கிய நோக்கம் தனிநபர்கள் அனைவரும் சேமிப்புகள் செய்ய உதவுகிறது. PPF திட்டம் அதிக வட்டி கொடுக்க கூடிய திட்டமாகும். இந்த திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய வட்டி வருமானத்திற்கு வரி விலக்கும் உண்டு.

                       

Eligibility to open PPF ( தகுதிகள் ):

• இந்திய குடிமகனாக இருக்க  வேண்டும்.

• ஒரு நபருக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும். 18 வயது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு Minor Account கூட்டாக இருக்கலாம்.

• NRI வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்த PPF Acount திறக்க முடியாது. 

• குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. 60வயதுக்கு மேற்பட்டவர்களும் 18 வயதிற்கு குறைவானவர்களும் இத்திட்டத்தில் இணையலாம். 

Open PPF Account : 

PPF கணக்குகளை தபால் நிலையங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் முக்கிய தனியார் வங்கிகளான ICICI Bank AXIS Bank HDFC Bank ஆகியவற்றில் திறக்கலாம். தனியார் வங்கிகளில் online Banking முறையில் எளிதாக திறக்கலாம். நீங்கள் தபால் நிலையங்களில் PPF கணக்கை துவங்க நினைத்தால் அதற்கான விண்ணப்பபடிவம் நேரில்  சமர்பிக்க வேண்டும்.

• முழுவதும் நிரப்பபட்ட விண்ணப்பம் Application ( Form A )

• இரண்டு புகைப்படம் ( Photo ) 

• ஆதார் கார்டு   • PAN Card

 • முகவரி சான்று மற்றும் கையொப்ப சான்று சமர்பிக்க வேண்டும். 

கணக்கு துவங்கபட்ட பின் passbook தரப்படும். சில வங்கிகளில் online statement முறையில் வழங்கப்படும்.


PPF Account Benefits நன்மைகள்: 

• இது அரசு ஆதரவு திட்டமாகும் அதனால் செய்யும் முதலீட்டு மற்றும் வட்டிக்கு  பாதுகாப்பு உண்டு.

• இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டிற்கு 1.5 லட்சம் வரிவிலக்கு உண்டு.

• PPF கணக்கிற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. இது வங்கி சேமிப்பிற்கு வழங்கப்படும் வட்டியை விட அதிகமான வட்டி கிடைக்க கூடிய திட்டமாகும்.

• PPF கணக்கானது அரசாங்க வங்கி சேமிப்பு சட்டம் 1873 -ன் கீழ் எந்த நீதிமன்றத்தாலும் அல்லது நீதிமன்ற உத்தரவு மூலமும் பறிமுதல் செய்ய முடியாது‌‌. இத்திட்டத்தில் மட்டும் தான் முதலீடு செய்யவருக்கு மட்டுமே பணம் சொந்தம். 

PPF கணக்கின் விவரங்கள்: 

• இந்த திட்டம் ஒரு நீண்டகால திட்டமாகும். 15 ஆண்டுகள் முதலீடுகள் செய்ய வேண்டும். இதில் 5   ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் கணக்கினை முடிக்க விரும்பினால் முடித்து கொள்ளலாம்.

• இந்த திட்டம் முழுவதும் வரி சலுகை உள்ள திட்டம் முதிர்ச்சி பெறும் போது முழு தொகைக்கும் வரிவிலக்கு உண்டு‌‌. நீங்கள் வங்கிகளில் நீண்டகாலத்திற்கு Fixed deposit பணம் இருந்தால் அதற்கு 20% வரி கட்ட வேண்டும். அதனால் நீண்டகால முதலீட்டிற்கு  PPF கணக்கு தான் சிறந்ததாகும். 

• இந்த திட்டத்தில் குறைந்தது 500₹ மற்றும் அதிகமாக 1.5 இலட்சம் கட்டலாம். ஆனால் ஆண்டிற்கு 1.5 இலட்சத்திற்கு அதிக பணம் கட்டினால் அதற்கு வட்டி கொடுக்கப்படாது மற்றும் அதற்கு வரி சலுகையும் கிடையாது.

• இந்த திட்டம் மட்டும் தான் நீண்டகால முதலீட்டற்கு  பாதுகாப்பான திட்டமாகும். அரசாங்க ஆதரவு இருப்பதால் பாதுகாப்பான திட்டமாகும். Mutual Fund முதலீடு போன்று நீண்டகால திட்டம் மற்றும் பாதுகாப்பான திட்டம் இந்த PPF திட்டம் மட்டுமே.

• இந்த திட்டத்தில் முதலீடு செய்த மூன்று ஆண்டுகளுக்க பிறகு நீங்கள் கட்டிய தொகையினை வைத்து வங்கிகளில் அல்லது தபால் அலுவலகத்தில் கடன் பெறும் வசதிகளும் உண்டு. கடனுக்கான வட்டி விகிதங்கள் வங்கிகளை பொருத்து மாறுபடும். 

PPF Tax benefits: 

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டிற்கு 1.5 இலட்சம்  sectio 80c மூலம் வரி சலுகை கிடைக்கும். PPF திட்டமானது இந்திய அரசால் (EEE) வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் திட்டத்தின் முதிர்வு முடிவில் கிடைக்கும் மொத்த பணத்திற்கும் வரி சலுகை உண்டு. 

PPF Interest Rate: 

 PPF திட்டத்திற்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிதி அமைச்சகத்தால் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். தற்போது இந்த PPF திட்டத்திற்கு  (2020 ஜனவரி-மார்ச் ) 7.10% 

PPF Withdrawal:

PPF கணக்கை வைத்திருக்கும் தனிநபர்கள் 15 ஆண்டுகள் முடிந்த பின் தான் முழு பணமும் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இருப்பினும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உடனடி பணம் தேவைப்பட்டால் 5ஆண்டுகள் முடிந்த பின் செலுத்திய மொத்த பணத்தில் 50%  பணத்தினை எடுத்து கொள்ள முடியும். ஒரு ஆண்டற்கு ஒருமுறை மட்டுமே பணத்தினை எடுக்க முடியும். 

Premature Closer இடைநிறுத்தல்: 

5ஆண்டுகள் முடிந்த பின்னர் தனிநபர்கள் கணக்கினை முடிக்கலாம். இருப்பினும் இது மிக கடினமான செயல்முறையாகும். ஏனென்றால் அதற்கான ஆவணங்களை சரியாக கொடுத்தால் மட்டுமே முடிக்க முடியும். அவசர மருத்துவ செலவு அல்லது குழந்தைகளின் மேல் படிப்பு ஆகிய காரணங்களுக்கு மட்டுமே தற்சமயம் அனுமதிக்கபடுகிறது. இருப்பினும் அதற்கான அனைத்து ஆவணங்கள் உயர் மருத்துவ அதிகாரி மற்றும் பல்கலைக்கழக முதல்வர் போன்ற உயர் அதிகாரிகளின் சான்றுகள்  வழங்கினால் மட்டுமே முடிக்க முடியும். 

PPF கணக்கு திறக்கப்பட்ட தேதியில் இருந்து 15ஆண்டுகளுக்கு பிறகு முதிர்ச்சியடைகிறது. முதியிர்சியின் போது கணக்கு வைத்திருப்பவர்கள் மூன்று வகையான முடிவுகளை எடுக்கலாம். 

1.) முதிர்வு தொகையை பெறுதல்: 

கணக்கு வைத்திருப்பவர் 15ஆண்டுகளுக்கு பிறகு பணத்தினை திரும்ப பெறலாம். கிடைக்கும் மொத்த வருமானத்திற்கும் வட்டி மற்றும் அசல் தொகைக்கு வரி கட்ட தேவையில்லை‌. இந்த திட்டத்திற்கு வரிவிலக்கு உண்டு. 

2.) PPF கணக்கை நீட்டித்தல்: 

PPF கணக்கினை நீட்டிக்க விரும்பினால் கூடுதலாக 5ஆண்டுகள் நீடிக்க முடியும். 15ஆண்டுகள் முடிந்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் திட்டத்தினை நீட்டிப்பதற்கான Form H - யை நீங்கள் கொடுப்பதன் மூலம் திட்டத்தினை நீட்டிக்கலாம். முழு பணத்தினை நீடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. முழு தொகையில் அதிகபட்சம் 60% பணத்தினை எடுத்து கொள்ள முடியும். 

3.) தொடர் நீட்டிப்பு: 

இந்த முறைக்கு நீங்கள் எந்த Form கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது‌. முழு தொகையும் PPF கணக்கில் இருந்தால் அத்தொகைக்கு வட்டி வருவாய் கிடைத்து கொண்டு தான் இருக்கும். தேவைப்படும் போது குறிப்பிட்ட பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால் இதில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே இத்திட்டத்தில் இருந்து பணத்தினை எடுக்க முடியும்.