PMSBY Scheme Details in Tamil | பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டம்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது மத்திய அரசால் 9 மே 2015 அன்று தொடங்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டமாகும். 18 முதல் 70 வயதுக்குட்பட்ட ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 பிரீமியத்தில் வங்கிக் கணக்குடன் இணைந்த மலிவு விலை காப்பீட்டுத் திட்டத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி  இத்திட்டத்தில் சேரும் பயனாளி விபத்தின் போது இறந்துவிட்டால் அவரின் நியமனதாரருக்கு Rs.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஒருவேளை விபத்தின் போது உறுப்புகள் நிரந்தர இயலாமை ஏற்பட்டால் இரண்டு லட்சம் ரூபாய் முழுமையாக வழங்கப்படும். பகுதி இயலாமையாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உங்களுக்கு பிறகு உங்களின் குடும்பத்தை பாதுகாக்க விபத்து காப்பீட்டு திட்டங்கள் (Accidence Insurance Scheme) உதவுகின்றன. ஆனால் விபத்து காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக பிரீமியம் தொகையை வசூலிப்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒன்றாக இருக்கும். இந்த அதிக பிரீமியம் தொகையால் ஏழை எளிய மக்கள் காப்பீட்டு திட்டங்களில் சேர தயக்கம் காட்டுகின்றனர்.

PMSBY Insurance

ஆனால் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் குறைந்த பிரீமியம் தொகையை செலுத்தி Rs.2,00,000 ரூபாய் வரையிலான விபத்து காப்பீட்டை பெறலாம்.

PMSBY திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள்:

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுக்குத் தகுதிபெற, எந்தவொரு தனிநபரும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும்.

• 18 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு தனிநபரும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

• அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட அவர்களது தொலைபேசி எண்ணுடன் அவர்/அவள் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

• திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது தனிநபர் தங்கள் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆதார் விவரங்கள் அவர்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும்.

• எந்தவொரு தனிநபருக்கும் ஒன்று அல்லது வெவ்வேறு வங்கிகளில் பல வங்கிக் கணக்குகள் இருந்தால், அவர்/அவள் ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே திட்டத்தில் சேரத் தகுதியுடையவர். கூட்டுக் கணக்கைப் பொறுத்தவரை, அனைத்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் திட்டப் பலன்களைப் பெறலாம்.

• NRI பயனாளியின் விஷயத்தில், இந்திய நாணயத்தில் பரிந்துரைக்கப்பட்டவருக்கு மட்டுமே உரிமைகோரல் பலன்கள் வழங்கப்படும்.

பிரீமியம் தொகை:

PMSBY திட்டத்திற்கான பிரீமியம் தொகையானது ஆண்டிற்கு Rs.12 ரூபாய் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இறுதியில் பயனாளரின் வங்கிக்கணக்கில் இருந்து தானாகவே (Auto debit) 12 ரூபாய் கழிக்கப்படும்.

எனவே நீங்கள் வங்கிக்கணக்கில் போதுமான அளவு இருப்பை வைத்திருக்க வேண்டும்.

PMSBY திட்டத்தின் பயன்கள்:

• பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் இணைத்த பயனாளி விபத்தில் இறந்தால், அவரின் நியமனதாரருக்கு (Nominee) 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

•  விபத்தில் முழுமையான ஊனம் அடைந்தால் முழு தொகையான 2 லட்சம் அளிக்கப்படும். பகுதி இயலாமை அடைந்தால் 1 லட்சம் வழங்கப்படும்.

இந்த திட்டம் உங்களுக்கு பிறகு உங்களின் குடும்பத்தை பாதுகாக்கிறது. மேலும் விபத்தில் ஊனமடைந்தாலும் இந்த திட்டத்தின் பண பலன்களை பயனாளர் பெற முடியும்.

இத்திட்டத்தில் இணைவது எப்படி: 

• வங்கிகளில் Internet Banking மூலம் PMSBY திட்டத்தில் இணையும் வசதியை வழங்குகின்றன. எனவே இந்த வசதியின் மூலம் நீங்கள் ஆன்லைன் வழியாகவே இத்திட்டத்தில் இணைய முடியும்.

• நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று PMSBY Form யை நிரப்புவதன் மூலமும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்திற்கான படிவத்தை வங்கியில் பெறலாம். 

• பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBJ) திட்டத்தில் நெட் பேங்கிங் மூலம், எஸ்.எம்.எஸ். மூலம் அல்லது நேரடியாக வங்கியில் படிவத்தைச் சமர்ப்பித்தும் இணைந்துகொள்ளலாம். திட்டத்தின் காப்பீடு தொகையைப் பெறுவதற்கு அதற்கான படிவத்தை (Claim Form) பூர்த்தி செய்து எந்த வங்கிக் கணக்கை இத்திட்டத்தில் இணைத்துள்ளீர்களோ, அந்த வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம் (Application form) மற்றும் காப்பீடு கோருவதற்கான படிவத்தை (Claim Form) கீழ்காணும் இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். > https://jansuraksha.gov.in/Forms-PMSBY.aspx

PMSBY - பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் விதிமுறைகள்: 

இந்த திட்டத்தில் இணைவதற்கு முன்பு இதன் விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியமாகும். அவற்றை கீழே காணலாம்.

 • இந்த திட்டத்திற்கான ஒரு ஆண்டு ஜூன் 1 முதல் மே 31 வரை கணக்கில் கொள்ளப்படும்.

• ஒவ்வொரு ஆண்டும் கட்டண தொகை மே 31 க்குள் செலுத்த வேண்டும். 

• திட்டத்திற்கான பிரீமியம் தொகையை செலுத்தாத பயனாளிகளின் கணக்குகள் செயலிழந்துவிடும்.

• இந்த திட்டத்தில் இருந்து வெளியேறும் நபர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இத்திட்டத்தில் சேரலாம்.

• இயற்கை மரணம் அடைந்தால் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது. ஏனெனில் இது விபத்து காப்பீட்டு திட்டம் மட்டுமே ஆகும்.