இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டின் வகைகள் | Health Insurance Meaning and Types.

இன்றைய நாளில் காப்பீடு மிக முக்கியமாகிவிட்டது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (life insurance) என்பது காப்பீட்டாளரின் (insured) இறப்பின் போது இறப்பின் போதான  ஈட்டுப் பலன்களை (death benefits) வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் (agreement). ஒன்று ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இறப்புக்குப் பிறகு பொருளாதார பாதுகாப்பை அளிப்பது. இரண்டாவது, பணத்தை அளிப்பதோடு, முதலீட்டையும் (investment) ஊக்குவிக்கும். முதலாவது, இறந்த பிறகுதான் பாதுகாப்பு அளிக்கும். மாறாக இரண்டாவது, குறிப்பிட்ட காலம் நிறைவடைந்த பின்னர் அல்லது காப்பீடு செயல்பாட்டில் இருக்கிற காலத்திலும்,உயிருடன் இருக்கும் காப்பீட்டாளருக்கு  பயன்களை  அளிக்கும். திரும்பக் கிடைக்கும் காப்பீட்டுத் தொகை மற்றும் பல்வேறு காரணிகள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பயன்களை காப்பீட்டுதாரருக்கு வழங்குகிறது. 

குறிப்பிட்ட கால வரையறை கொண்ட காப்பீடுகள் (Term Insurance)

இது ஒரு எளிமையான, இறப்புக்குப் எதிரான அடிப்படைக் காப்பீட்டுத் திட்டம். குடும்பத்தின் வருமானமீட்டும் தலைவர் எதிர்பாராத விதமாக இறக்க நேரிட்டால், காப்பீடு செய்யப்பட்ட தொகை மொத்தமாகக் கிடைக்கும். இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் 85 வயது வரை செயல்பாட்டில் இருக்கிறது. 

இறப்பின் போதான பயன் தரும் காப்பீட்டுத் திட்டம் (Death benefit)

இந்த வகையான காப்பீட்டுத் திட்டங்கள் காப்பீடு செய்து கொண்டவரின் இறப்பின் போது மட்டுமே பயனளிக்கிறது. ஒருவேளை அவர் வரையறைக் காலத்தைக் கடந்து விட்டால், அவருக்கு மொத்தமாக எந்த முதிர்வுத் தொகையும் (maturity benefit )கிடைக்காது. இத்தகைய திட்டங்கள் செலுத்திய தவணைத் தொகைகளை (premiums) மட்டும் சில கூடுதல் நன்மைகளோடு திருப்பித் தரும்.

தவணைத் தொகை

கால வரையறைக்கு (term plans) உட்பட்ட இத்தகைய காப்பீட்டுத் திட்டங்கள் குறைந்த அளவு தவணைத் தொகையை உள்ளடக்கியவை. உயர் காப்பீட்டுத் தொகையை உங்களுக்கு வழங்கக் கூடியவை. ஒரு முடிவு செய்யப்பட்ட நிலையான தொகையை (fixed premium) நீங்கள் செலுத்த வேண்டும். 

கால வரையறைக்கு உட்பட்ட காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் (Types of term plans)
best health insurance

a) Regular plans:

முழுக்க முழுக்க இறப்புக்குப் பின்பான பணப்  பாதுகாப்பை உறுதி செய்யும் இத்தகைய திட்டங்கள், 30 வயதுடைய ஒருவருக்கு, 40 ஆண்டுகளில் ஒரு கோடிக்கான காப்பீட்டுக்கு, ₹11,200 ஆண்டுக்கான காப்பீட்டுத் தவணைத் தொகையை (yearly premium) கட்டணமாகக் பெறுகின்றனர்.

b) Return of premium:

இத்தகைய திட்டங்கள் காப்பீடு (insure) செய்யப்பட்ட காலத்தில் இறந்து போக நேரிட்டால் முழுமையான முதிர்வுத் தொகையை (death benefit) வழங்கும். ஒருவேளை அவர் வரையறைக் காலத்துக்கு மேல் வாழும் பட்சத்தில், கட்டிய தவணைத் தொகையை திரும்பத் தரும் . 10 முதல் 40 ஆண்டுகள் வரை வரையறைக் காலம் (term) கொண்டது. 30 வயதுள்ள ஒருவருக்கு ₹1 கோடி முதிர்வுத் தொகைக்கான ஆண்டு தவணைத் தொகை ₹15,725.   

c) Staggered payout:

ஒருவேளை, காப்பீடு செய்து கொண்டவர் இறக்க நேரிட்டால், முதிர்வுத் தொகையின் (death benefit) ஒரு பகுதியை அவரது வாரிசுக்கு வழங்கும், மீதமுள்ள தொகையானது 10 அல்லது 20 ஆண்டுகளில் வழங்கப்படும். இதற்கான தவணைத் தொகை, 30 வயதுள்ளவர்க்கு, ₹10 லட்சம் முதிர்வுத் தொகைக்கும், அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கான ₹50,000 ஆண்டு வருமானம் தரும் திட்டத்துக்கு தவணைத் தொகை ₹15,725.  

d) Single premium:

உங்களுக்கு தவணைத் தொகையை ஆண்டுதோறும் செலுத்த விருப்பமில்லை என்றால் ஒட்டுமொத்த தவணைத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தும் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். அதற்கு ஏற்ற உயர் தவணைத் தொகை வசூலிக்கப்படும். இதில் ஒவ்வொரு முறையும் தவணைத் தொகை கட்டுவதற்கான நெருக்கடிகள் இல்லை. 85 வயது வரை இந்த வகை திட்டங்கள் செயல்படுகிறது. 30 வயது மனிதருக்கு ₹1 கோடி முதிர்வுத் தொகையை 20 ஆண்டுகளில் வழங்கும் இந்தத் திட்டத்துக்கான ஒருமுறை தவணைத் தொகை ₹1.8 லட்சம். 

e) Increasing/decreasing:

பெயரிலேயே குறிப்பிட்டது போல, திட்டத்தின் வரையறை காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் முதிர்வுத் தொகையை குறிப்பிட்ட அளவு அதிகரிப்பது அல்லது குறைப்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு. ஒருவேளை, தவணைத் தொகை அளவும் மாறுபடலாம் அல்லது நிலைத்திருக்கலாம். தவணைத் தொகையானது, வழக்கமான திட்டங்களை விட அதிகமாக இருக்கும். அதிகரிக்கப்படும் முதிர்வுத் தொகை திட்டங்கள் பணவீக்கத்தை (inflation) வெல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். குறையும் முதிர்வுத் தொகைத் திட்டங்கள் பொதுவாக கடன் அபாயங்களை ஈடுகட்டுவதற்காக  வடிவமைக்கப்பட்டவை. தவணைத் தொகையானது முதிர்வுத் தொகைக்கு ஏற்றவாறு குறைக்கப்படும். 30 வயதுள்ள மனிதருக்கு 30 வருடங்களில் ₹1 கோடி முதிர்வுத் தொகை வழங்கும் திட்டத்துக்கான ஆண்டு தவணைத் தொகை ₹22,801.

யார் இத்தகைய காப்பீடுகளை வாங்க வேண்டும்?

நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருந்து அந்தக் குடும்பத்தின் கடன் போன்ற சுமைகளை ஏற்பவராகவும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவருமாக இருந்தால், நீங்கள் இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களை வாங்கலாம். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக இருந்தாலோ, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றாலோ உங்களுக்கு இவை தேவையில்லை.

Whole life insurance:

இதனை Permanent plan என்றும் அழைக்கிறார்கள். ஒருவரின் வாழ்நாள் முழுவதும் அல்லது 100 ஆண்டுகளுக்கு இந்த காப்பீடு செயல்படும்.   தவணைத் தொகை செலுத்தப்படும் காலத்தைப் பொறுத்து, இவை இரண்டு வகைகளாகும். 

இறப்பு / முதிர்வு நன்மை வழங்கும் திட்டம் (Death/maturity benefit)

காப்பீடு செய்து கொண்டவரின் இறப்பில், பரிந்துரைக்கப்பட்டவர் (nominee) முதிர்வுத் தொகையை மொத்தமாகப் பெறுவார். ஒருவேளை அவர் 100 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தால், அவருக்கு முதிர்வு வருமானம் (maturity proceeds) கிடைக்கும். வருமானத்தை மொத்த தொகையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பகுதியாகவோ (installments) பெறலாம்.

தவணைத் தொகை

வரையறைக் காலம் முழுவதும் தவணைத் தொகை முடிவு செய்யப்பட்டதாக இருக்கும். ஒருவேளை 15 ஆண்டுகளுக்கு மட்டும் தவணைத் தொகை செலுத்தும் வகையில் இயங்கும் திட்டங்கள் அதிக தவணைத் தொகை கொண்டதாக இருக்கும். 30 வயதுள்ளவருக்கு முழுமையான வாழ்நாள் பாதுகாப்பை வழங்கும் இத்தகைய திட்டங்களுக்கான தவணைத் தொகை ஆண்டுக்கு ₹15,167. 

இத்தகைய காப்பீடுகளை யார் வாங்கலாம்?

உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு பாரம்பரிய தொடர்ச்சியை விட்டுச் செல்ல நீங்கள் விரும்பினால் தவிர, இத்தகைய திட்டங்கள் தவிர்க்கப்படுவதே நல்லது. எப்படியிருப்பினும் இது ஒரு நல்ல யோசனை அல்ல.

Traditional insurance:

இத்தகைய திட்டங்கள் காப்பீடு மற்றும் முதலீட்டுக் கலவையாக வடிவமைக்கப்பட்டவை. குறிப்பாக ஒரு தனி மனிதரின் பொருளாதார வளத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டவை. ஒரு சிறு குறிப்பிட்ட தொகையை பாதுகாப்பிற்காக வழங்குகிறது. முதிர்வு காலத்தின் (payout) வழங்கலைப் பொறுத்து இது இரண்டு வகையாகும்\

1. Endowment plan:

இறப்பு / முதிர்வு காலப் பயன்கள் (Death/maturity benefit)

முழுமையான முதிர்வுத் தொகையோடு கூடுதல் ஊக்கத்தொகையும் (bonus) இதில் கிடைக்கும். காப்பீடு செயல்பாட்டில் இருந்த காலத்தில் காப்பீடு செய்து கொண்டவர் எவ்வளவு ஆண்டுகள் உயிரோடு இருந்தாரோ அத்தனை ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒருவேளை குறிப்பிட்ட காலத்துக்கு மேல் காப்பீடு செய்து கொண்டவர் உயிர் வாழ்ந்தால் வரையறைக் காலம் முடியும்போது முதிர்வுத் தொகை, ஊக்கத்தொகை மற்றும் ஏனைய பலன்கள் காப்பீடு செய்து கொண்டவருக்கு வழங்கப்படும்.

தவணைத் தொகை

தவணைத் தொகையானது ஏனைய கால வரையறைக்குட்பட்ட காப்பீட்டுத் திட்டங்களை விட அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தவணைத் தொகை செலுத்த வேண்டியிருக்கும். 30 வயதுள்ள ஒருவருக்கு, ₹10 லட்சம் முதிர்வுத் தொகை கொண்ட 20 வருடத்துக்கான 10 ஆண்டுகள் மட்டும் தவணை செலுத்தும் திட்டத்துக்கான ஆண்டு தவணைத் தொகை ₹1.04 லட்சம்

2.  Moneyback plan: 

இறப்பு / முதிர்வு காலப் பயன்கள்:Death/maturity benefit

முந்தைய திட்டத்துக்கும் இதற்குமான வேறுபாடு முதிர்வுத் தொகையானது பகுதியாகப் பிரிக்கப்பட்டு  குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும். ஒருவேளை வரையறைக் காலத்தைக் கடந்து காப்பீடு செய்து கொண்டவர் உயிர் வாழும் சூழலில், அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும். இது குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணம் போன்றவற்றுக்கு செலவழிக்க உதவும்

தவணைத் தொகை

ஆஸ்தி வகையான காப்பீட்டோடு ஒப்பிடும் போது, இந்த வகையில் தவணைத் தொகை அதிகமாகும். ஏனெனில் இது காப்பீடாகவும், முதலீடாகவும் செயல்படுகிறது. 30 வயதுள்ள மனிதருக்கு, ₹10 லட்சம் முதிர்வுத் தொகை வழங்கும்.20 ஆண்டுகளுக்கான திட்டத்துக்கு ₹1.18 லட்சம் ஆண்டு தவணைத் தொகையாகும். 

யார் இதை வாங்கலாம்?

முறையான முதலீட்டு வாய்ப்புகள் இல்லாதவர்கள், இத்தகைய திட்டங்களை ஒரு பொருளாதார இலக்கை அடையும் எண்ணத்தோடு அணுகலாம். ஆனால், குறைவான பாதுகாப்பு மற்றும் வருமானத்தைக் கொண்டவர்கள் இதைத் தவிர்ப்பதே நல்லது. இந்தத் திட்டத்தை வரி சேமிப்பதற்கு பயன்படுவதாக எண்ணுவது தவறு.

யூலிப்ஸ் காப்பீடுகள் எனப்படும் பங்குகளோடு (markets) இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (Ulips)

உங்களுக்கு காப்பீட்டுடன் முதலீடும் வேண்டுமென்றால் இத்திட்டத்தை தேர்வு செய்யலாம். இதில் செலுத்தப்படும் தவணையானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். எந்த பங்குசந்தையில் முதலீடு செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

தவணைத் தொகை

ஒரு குறிப்பிட்ட காலவரையறை வரை தவணைத் தொகை கட்டாயமாக இருக்கும் (எ.கா: 5  ஆண்டுகள்) அதன் பிறகு காப்பீடு செய்து கொண்டவர் தொடர்ந்து தவணைத் தொகை செலுத்துவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்வார். 

இறப்பு / முதிர்வு காலப் பயன்கள் Death/maturity benefit:

ஒருவேளை காப்பீடு செய்து கொண்டவர் இறக்க நேரிட்டால், பரிந்துரைக்கப்பட்டவர் முழுமையான முதிர்வுத் தொகையைப் பெறுவார். ஒருவேளை அவர் வரையறைக் காலம் கடந்து உயிர் வாழும் சூழலில், அவருக்குப் பயன்கள் கிடைக்கும். 30 வயதுள்ளவருக்கு ₹10 லட்சம் முதிர்வுத் தொகை வழங்கும். 20 ஆண்டு திட்டத்துக்கு, ஆண்டொன்றுக்கு ₹1 லட்சம் தவணைத்தொகையாகும். 

இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களை யார் வாங்கலாம்?

நீண்ட கால முதலீட்டுத் திட்டம் கொண்டவர்கள், 8 முதல் 10 ஆண்டுகள் வரை இத்தகைய திட்டங்களை ஒரு முதலீட்டுக் கருவியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கால எல்லைக்கு மேல் நல்ல வருமானமீட்டக்கூடிய திட்டங்களாக இவை இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையைத் தாண்டி இதில் முதலீடு செய்வது நல்ல பலனளிக்கும்