AIS for Taxpayers' எனும் மொபைல் போன் செயலியை இந்திய வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (DIS) போன்ற விவரங்களை வரி செலுத்துவோர் இதில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலியில் வரி செலுத்துவோருக்கு விரிவான தகவல் வழங்கப்படுவதாக தெரிகிறது.
வரி செலுத்துவோர் தங்கள் TDS, வட்டி, Divident, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் வருமான வரியை திரும்பப் பெறுதல் (Tax Returns) தொடர்பான தகவல்களை எளிதாக இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் நோக்கில் எளிய முறையில் இந்த செயலி வழங்கும் என்றும் தெரிகிறது.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு, வரி தொடர்பான பல்வேறு சந்தேகங்கள், தகவல்கள் தேவைப்படும். இதைபற்றி வருமான வரித்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும். இந்நிலையில் மொபைல் போனிலேயே உங்களின் அனைத்து தகவல்களையும் இருந்த இடத்தில் இருந்தே அறிய முடியும் அதற்காக வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ள ஆப் தான் AIS App.
இந்த AIS App மூலம் வரி செலுத்துபவர்கள் தங்கள் தகவல் சுருக்கம், தகவல் அறிக்கைகளை ஆண்டுதோறும் இதில் பார்க்க முடியும். வருமான வரித்துறையால் இலவசமாகவே இந்த சேவையை பயன்படுத்த முடியும். AIS App கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
வெளிநாட்டு பணம்:
மேலும் GST தரவு, வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் போன்ற பிற தகவல்களையும் இந்த ஆப் மூலம் பார்க்கலாம். ஆப்பில் காட்டப்படும் தகவல் தொடர்பான கருத்துக்களையும் பயனர்கள் தெரிவிக்கலாம்.
OTP முக்கியம்:
இந்த செல்போன் செயலியை பெறுவதற்கு வரி செலுத்துவோர் பயன்பாட்டில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பான் எண்ணை வழங்குதல், செல்போன் எண்ணில் அனுப்பப்பட்ட ஓடிபி மூலம் அங்கீகரிக்க வேண்டும். மின்னஞ்சல், இ-பைலிங் போர்ட்டலில் பதிவு செய்த பின்னர் பயன்படுத்த முடியும்.
செயலியின் அம்சங்கள்:
பொதுவான விவரங்கள் என சொல்லப்படும் பயனர் பெயர் மற்றும் பான் கார்டு விவரங்களை பயனர்கள் பெறலாம்.
TDS குறித்த கருத்துகளை வரி செலுத்துவோர் இதன் மூலம் வழங்கலாம் என தெரிகிறது. அதை PDF கோப்பாக ஒருங்கிணைக்கவும் முடியும் என தெரிகிறது.
இந்த செயலியைப் (APP) பயன்படுத்துவது எப்படி:
1. AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
2. பின்னர் பயனர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
3. இதற்கு பான் கார்டு எண்ணை பயனர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. Phone Number மற்றும் E-Mail முகவரிக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்டு பயனர்கள் இதில் தங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
4. அதனைத் தொடர்ந்து பயனர்கள் 4 டிஜிட் கொண்ட ரகசிய எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். இதனை AIS வலைதளத்திலும் பயன்படுத்த முடியும்.
5. Google Play Store மற்றும் App Store இல் இது இலவசமாகவே கிடைக்கிறது.