திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வீட்டுக்கடன் | Tdcc Bank Home Loan.

 தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் வங்கிகள் பல வங்கிகள்  வீட்டுக்கடன் வழங்கி வருகின்றன. இருந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கும் சலுகைகள் வேறு எந்த வங்கிகளிலும் கிடைப்பதில்லை.  அதில் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறந்த உதாரணம் ஆகும். 

கூட்டுறவு வங்கிளில் உள்ள வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை விட தனியார் வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைவானதாக இருக்கும் ஆனால் கூட்டுறவு வங்கிகள் தனிவட்டி முறையில் கடன்களை வழங்குகின்றன. ஆதலால் நீண்டகால கடன்களுக்கு கூட்டுறவு வங்கிகள் சிறந்தது மற்றும் லாபகரமான ஒன்றாகும்.

 ஒருவருக்கு வீட்டுக்கடன் என்பது, அவர் வாங்கும் சம்பளம் அல்லது அவரது வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சம்பளதாரர்களாக இல்லாமல் தொழில் செய்பவர்களாக இருந்தால் அவர்களது ஆண்டு வருமானத்தை வைத்து கணக்கிட்டு வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி கிடைக்கக்கூடிய கடன் அளவைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டுக்கடன் வாங்க தகுதிகள்:

மாத தவணை செலுத்தும் அளவுக்கு நிலையான வருமானம் உள்ளவர்கள்- குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்தும் சுய தொழில் செய்பவர்கள்.

  1. கடன் கோருபவர் பெயரில் அடிமனைக்கு உரிமை இருக்க வேண்டும்.
  2. வீட்டு மனையாகவோ / புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் முழுமையாக முற்றுப்பெறாத வீடாகவோ இருக்கவேண்டும்.
  3. வீடு கட்டப்படவுள்ள இடம், குடியிருப்பு பகுதியாக இருக்க வேண்டும்.
  4. புதிய வீடு கட்ட ரூ1,00,000/-- கடனுக்கு ரூ4100/- மாத வருமானம் இருக்க வேண்டும்.
  5. மனுதாரர் வருமானம் மற்றும் குடும்ப அங்கத்தினர் வருமானம் சேர்த்துக் கொள்ளப்படும்.
  6. கடன் உச்ச வரம்பு புதிய வீடு கட்ட ரூ30,00,000/- விரிவாக்கத்திற்கு ரூ3,00,000/- மட்டும்.
  7. தவணைக்காலம் 180 மாதங்கள் (விடுப்பு காலம் உட்பட)
  8. வட்டி விகிதம் 10.25%

Particularsloan AmountInterest
கடன் கோரும் தொகை
ரூ100000
முதல் மாத தவணை
ரூ100000 / 120
ரூ 833/-
முதல் மாத வட்டி ( 31 நாட்களுக்கு)
ரூ 845/-
கூடுதல் தவணை
ரூ 1678/-

*மனுதாரரின் வருவாய் தகுதி 1678 X 3 = 5034 ( உத்தேசமாக ஒருவர் ரூ 1/- லட்சம் கடன் பெற வேண்டுமாயின் அவருக்கு மாதம் வருமானம் ரூ 5034 /- வர வேண்டும்).

*மனுதாரரின் மாத வருவாயோடு அவரை சார்ந்துள்ள அவரது மனைவி / கணவன், மகள், மகன் ஆகியோரது வருவாய்களையும் திருப்பி செலுத்தும் சக்திக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இவர்களை இணை மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்.

co-operative-bank-home-loan

கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன் பெறுவதால் உள்ள நன்மைகள்:

• மிக குறைவான வட்டி விகிதம்

• அடமானமாக வைக்கப்படும் சொத்துக்களுக்கு அதிக பாதுகாப்பு 

• தினசரி குறையும் கடன்-நிலுவைத்தொகைக்கேற்ப வட்டி (Interest on daily reducing Balance)

• கடன் முடியும்வரை குறைந்த ப்ரீமியத்தில் ஆயுள் காப்பீடு ( "கடன் தவணை செலுத்தும் காலத்தில் விண்ணப்பதாரர் உயிரிழக்க நேரிட்டால், மீதமுள்ள தவணைத்தொகை முழுவதுமாக காப்பீட்டு நிறுவனத்தால் செலுத்தப்பட்டு கடன் முடிக்கப்பட்டு வாரிசுதாரரிடம் சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்".)

• மாதத் தவனைக்கு மேற்கொண்டு நீங்கள் செலுத்தும் கூடுதல் தொகை (Advance Repayment) உங்கள் அசல் நிலுவையில் வரவு வைக்கப்பட்டு மறுநாளில் இருந்து மீதமுள்ள அசல் தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இவ்வாறு அவ்வபோது கூடுதல் தொகை செலுத்தி விரைவில் கடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம். இவ்வாறு கூடுதலாக செலுத்தப்படும் தொகைக்கு கூடுதல் கட்டணம் "No Precloser Fees"எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை.

வீட்டுக்கடன் தொகை எவ்வளவு பெறமுடியும்: 

உங்கள் வயது, வருமானம், மற்றும் ப்ராஜக்ட் காஸ்ட் (வீடு கட்ட தேவையான மொத்த தொகை அல்லது வாங்கபோகும் வீட்டின் மொத்த மதிப்பு), இவை மூன்றையும் வைத்து தான் நிர்னயிக்கப்படுகிறது.

வயது - பொதுவாக ஒருவர் 55  வயது(Salaried)  வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும்..

வருமானம் - பொதுவாக ஒருவர் தனது மாத வருமானத்தில் இருந்து 70% வரை மாத தவணை செலுத்த முடியும். (Including all existing and proposed EMIs)

வட்டி விகிதம்:

மிக குறைந்த வட்டி விகிதமாக  வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. (கூட்டுறவு வங்கிகளில் தனிவட்டி முறையில் கடன்‌ வழங்கபடுகிறது.)

வீடு கட்டும் கடன் (HCL) - 10.25%

வீட்டு அடமான கடன் (HML) - 10.5%

தேவையான ஆவணங்கள்:

  1. அசல் பத்திரம்.
  2. மூலப்பத்திரம்.
  3. வில்லங்க சான்று 14/31 - ஆண்டுகளுக்கு.
  4. அடிமனைக்கு - மனை வரி ரசீது - நடப்பு ஆண்டுக்கு.
  5. சிட்டா, அடங்கல்.
  6. பட்டா.
  7. நில அளவை பேரேட்டு நகல் (எப்.எம்.பி) (வீடு கட்டவுள்ள இடத்தை மார்க் செய்து காண்பிக்க வேண்டும்).
  8. (அ) நகர அளவை பேரேட்டு நகல் (Town Survey Extract).
  9. வழிகாட்டும் மதிப்பு (சார்பதிவாளர் அலுவலகத்தில் பெற வேண்டும்) (same logic).

  10. 9 . நிலம் / மனை பூர்வீகமாயின்

    அ) 31 - வருடங்களுக்கு வில்லங்க சான்று

    ஆ) 13 - வருடங்களுக்கு முன்பு - யார் பெயரில் மனை இருந்தது என்பதற்கான சிட்டா நகல் / "அ" பதிவேடு நகல் - தாசில்தார் சான்றுடன்

    இ) சிட்டா, அடங்கல்

    ஈ) பட்டா

    உ) நில அளவை பேரேட்டு நகல்

    ஊ) வம்சா வழி சான்று