தொடர் வைப்பு நிதி என்றால் என்ன:
ஓர் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஓர் குறிப்பிட்ட காலத்திற்க்கு தொடர்ந்து சேமித்து வருவதே தொடர் (RD) வைப்பு நிதியாகும். நாம் சேமிக்கும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை கற்று கொள்ளலாம்.
தொடர் வைப்பு நிதியின் காலம்:
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், ஒரு Recurring Deposit கணக்கை குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு திறக்க முடியும். இதில் குறைந்தது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். நாம் தேர்ந்து எடுக்கும் கால அளவிற்கு ஏற்ப வட்டி நிர்ணயிக்கப்படும். நாம் திட்டத்தில் சேரும் போது என்ன வட்டி நிர்ணயிக்க படுகின்றதோ அதே வட்டி தான் திட்டத்தின் முதிர்வு காலம் வரை தொடரும்.
காவிரி தென்றல் தொடர் வைப்பு திட்டம்:
1. சேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல்
2. நிதித்தேவைகளை சுயமாக பூர்த்திசெய்தல்
3. தொழில் செய்து குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்துதல்.
4. பெண்கள் பெயரில் சொத்துக்களை உருவாக்குதல்.
RD வட்டி விகிதம்:
ஒரு வாடிக்கையாளர் ஒரு தொடர் வைப்பு கணக்கை குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்ச வரம்பு 3 ஆண்டுகள் வரை செயலில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் 7.75% வருடாந்திர வட்டியைப் பெறுவீர்கள். நீங்கள் மூத்த குடிமக்கள் மக்கள் தொகையின் கீழ் வந்தால் 0.50% கூடுதல் வட்டியைப் பெறலாம்.
தொடர் வைப்பு நிதியின் நன்மைகள்:
1. மிக எளிமையான சேமிப்பு திட்டம். நாம் தொடர்ந்து சேமிக்க பழகுவதற்கு ஏற்ற திட்டம்.
2. நாம் சேமித்த பணம் மற்றும் வட்டி, முதிர்வு காலத்தில் நம் கணக்கில் வரவு வைக்க படும்.
3. குறைந்தது 500₹ கொண்டே இந்த கணக்கை தொடங்கலாம்.