மாத சம்பளம் வாங்குபவர்கள் சேமிப்பது எவ்வாறு?

நம் வாழ்க்கை தரம் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்று  நினைத்தால்  நிச்சயம் சேமிப்பை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நமது வருமானத்தைச் சேமித்து மட்டுமே காலம்காலமாக நாம் பின்பற்றும் பழக்கம். முன்பெல்லாம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தற்போது, வங்கி வைப்புத்தொகை, தங்கப்பத்திரங்கள், மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை எனப் பலவிதமான முதலீட்டு வாய்ப்புகள் பெருகியுள்ளன. இவற்றில் நமக்குத் சிறந்ததோ அவற்றில் நம்பிக்கையான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, முதல் நாள் சம்பளத்திலிருந்தே முதலீட்டைத் தொடங்குவது அவசியம்.

 சேமிப்பு என்பது என்ன: 

உங்களது அன்றாட வாழ்க்கைக்கு போக மீதமிருக்கும் சிறுபணமும், பெரிய சேமிப்புதான். மாத சம்பளக்காரர்கள் என்றால், அடுத்த சம்பளம் வரும்வரை தனது குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு போக மீதமிருக்கும் பணம்தான் சேமிப்பு. ஆனால் அத்தியாவசிய தேவைகளை சுருக்கிக்கொண்டு சேமிப்பவர்களும் இருக்கிறார்கள். அதேபோல அனாவசியமாக செலவழிப்பவர்களும் இருக்கிறார்கள்.

எந்த வழிகளில் சேமிக்கலாம்: 

 நீங்கள் சேமிக்கும் பணம், சேமிக்கும் அளவை விட கூடுதலாக கிடைத்தால்  லாபகரமான சேமிப்பாக அமையும். அந்த வகையில் Insurance, Fixed Deposit, Rd, Post Office savins, மியூட்சுவல் பண்ட். இப்படி சேமிக்க நிறைய வழிகள் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும், குறிப்பிட்ட வட்டி விகிதம் மற்றும் குறிப்பிட்ட காலத்தை அடிப்படையாக கொண்டு, சேமிப்பை இரட்டிப்பாக்குகிறது. அரசின் சிறந்த சேமிப்பு திட்டங்கள் | Best Saving Plans in India.

சேமிப்பை இரட்டிப்பாக்கும் வழிகள்: 

பங்கு சந்தை போன்ற Risk அதிகமாக இருக்கும் எல்லா சேமிப்பு தளங்களும் சேமிப்பை வெகுவிரைவாக இரட்டிப்பாக்கும். அதே வேளையில் பொறுமை மற்றும் நீண்ட கால முதலீடு செய்யாவிடில்  உங்களது சேமிப்பை வெகுவிரைவாகவே கரைக்கக்கூடும். பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி? How To Invest Share Market Details In Tamil.

monthly saving


சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: 

அவசரகால தேவைகளை அல்லது எதிர்ப்பாரா பொருளாதார சிக்கலை தீர்க்க சேமிப்பு எந்த அளவிற்கு அவசியமோ, நீண்டகால இலக்குகளை அடைவதற்கு சரியான மற்றும் உரிய முதலீடு என்பது முக்கியமானது மற்றும் அவசியமானது. பண மேலாண்மைக்கான முதல் படியாக சேமிப்பு பார்க்கப்படும் அதே நேரத்தில், உரிய தொகை போக மீதமுள்ள உங்கள் சேமிப்பு பணத்தை கொண்டு மேலும் பணம் ஈட்டும் உத்தியான முதலீடு என்பது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

சேமிப்பு பழக்கத்தில் தவிர்க்க வேண்டியவை:

சேமிக்க நினைத்தால், முதலில் கடன் பெறுவதை நிறுத்த வேண்டும். கையில் இருக்கும் கடன் சுமைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் கடன், சேமிக்க வழிவகையே தராது. 

எந்தெந்த வயதினர் சேமிக்கலாம்: 

புதிதாக வேலைக்கு செல்ல தொடங்கியிருக்கும் இளைஞர்கள், சின்ன தொகையை சேர்த்து வைக்க பழகலாம். குறிப்பாக பங்கு சந்தைகளில், முதலீடு செய்யலாம். அது 10 வருடங்களில் பெரிய முதலீடாக வளர்ந்திருக்கும். குடும்ப தலைவர்கள், 5 வருடங்களில் பலன் தரக்கூடிய குறுகிய கால மியூட்சுவல் பண்ட்ஸில் சேமிக்கலாம். பெண்கள் வழக்கம்போல தங்கத்தில் முதலீடு செய்வது, நகையாக அணிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் கொடுக்கும். நல்ல முதலீடாகவும் அமையும்.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்? Senior Citizen Savings Scheme In Tamil.