LIC நிறுவனம் சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இதன் 5 % பங்குகளை விற்பதன் மூலமாக சுமார் 75,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசால் நிதி திரட்ட முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. LIC-யில் 25 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ள நிலையில், மத்திய அரசு வெளியிட உள்ள IPO-வில் மொத்த பங்குகளில் 10% பங்குகளை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
LIC பங்குகள் எப்போது விற்பனையாகிறது:
LIC நிறுவனம் வரைவுஅறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துவிட்டதால், வரும் நாட்களில் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான SEBI அதற்குரிய தேதியை அறிவிக்கும். அனைத்துப் பணிகளையும் LIC முடிக்கும்பட்சத்தில் 2022, மார்ச் 31-ம்தேதிக்குள் பங்கு விற்பனை இருக்கும்.
LIC IPO-வுக்கு விண்ணப்பிப்பது எப்படி:
LIC பங்குகளை வாங்க விரும்புவோர் மற்றும் பாலிசிதாரர்கள் முதலில் DEMAT கணக்கு ஒன்றினை தொடங்க வேண்டும். LIC IPO மட்டுமல்ல எந்த IPO-விலும் பங்கேற்க விரும்பினாலும் DEMAT கணக்கு அவசியம்.
LIC IPO சந்தை மதிப்பு எவ்வளவு :
LIC-யின் 5%பங்கு வெளியீட்டு மதிப்பு ரூ.5.39 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
LIC நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.22 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் இது இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக LIC இருக்கும்.
பங்கின் விலை எவ்வளவு என எதிர்பார்க்கப்படுகிறது :
பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்படி, ஒரு பங்கின் விலை ரூ. 2100 முதல் ரூ.2,900 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
LIC IPO-ன் Face Value எவ்வளவு :
LIC வரைவுஅறிக்கையின்படி ஒரு பங்கின் மதிப்பு ரூ.10 ஆக நிர்ணயி்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 31.62 கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
LIC IPO-வுக்கு யார் விண்ணப்பிக்கலாம்:
DEMAT கணக்கு வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் LIC ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் LIC பாலிசிதாரர்களுக்கு பங்கின் மதிப்பில் 5% தள்ளுபடியும், வெளியிட உள்ள மொத்த பங்குகளில் 10 % பாலிசிதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. LIC பாலிசியுடன், PAN Card பாலிசிதாரர்கள் இணைத்திருப்பது அவசியம். 35 % பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படலாம்.
LIC ஊழியர்களுக்கு பங்கு விற்பனையில் தள்ளுபடி உண்டா :
LIC ஊழியர்களுக்கு 5 % பங்குகள் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, இவை 5 % தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற LIC பங்கு வெளியீட்டில் அதன் பாலிசிதாரர்களுக்கும் சிறப்பு சலுகை வழங்க உள்ளதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. பாலிசிதாரர்களுக்கும் 5% தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
ஊழியர்களுக்கு 1.58 கோடி பங்குகளும், பாலிசிதாரர்களுக்கு 3.16 கோடி பங்குகளும் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாலிசிதாரர்களுக்கு உள்ள நன்மைகள்:
மொத்த பங்குகளில் 10 % பங்குகளை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள பாலிசிதாரர்கள் வசம் PAN CARD இருக்க வேண்டும். அந்த பான்காரடை பாலிசி வசம் இணைக்க வேண்டும். இதனை தொடரந்து DEMAT கணக்கு இருக்க வேண்டும். இவை இருந்தால் LIC ஐபிஓவில் பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க முடியும்.
LIC பாலிசியுடன் பான் கார்டை இணைப்பது எப்படி:
https://licindia.in/ என்ற இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ LIC இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/ என்ற நேரடி இணைப்பைப் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் 8 கோடி DEMAT கணக்குகள் மட்டுமே உள்ளன. ஆனால், 25கோடிக்கும் மேலான பாலிசிதார்கள் உள்ளனர். அதனால் பெரும்பாலானவர்களிடம் DEMAT கணக்கு இல்லை. அதாவது பல பாலிசிதாரர்கள் வசம் டிமேட் கணக்கு இல்லை. LIC பங்கு வேண்டும் என்றால் உடனடியாக டிமேட் கணக்கு தொடங்கும் பட்சத்தில் பங்குகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. LIC-யின் வளர்ச்சியில் பாலிசிதார்களும் பங்கேற்க முடியும்.