தங்க பத்திரம் திட்டம் என்றால் என்ன? Sovereign Gold Bond Detail In Tamil.

தங்க பத்திரத் திட்டம் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்கள் என எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளலாம். தங்கக் கட்டிகளை வாங்குவதற்கு பதிலாக இந்தப் பத்திரங்களை வாங்குவது நல்லது என வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

 ஆபரணத் தங்கம் மற்றும் கட்டித் தங்கம் போன்றவற்றை வாங்குவதைக் குறைப்பதற்காகவே இந்த தங்க பத்திரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி கிடைக்கும். ஆனால் தங்க நகைகளுக்கு அப்படி வட்டி ஏதும் கிடைக்காது. இந்த வட்டி விகிதம் 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.

ஆபரணத் தங்கங்களைப் போன்று இந்தப் பத்திரங்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன்பெற முடியும்.

                       
      
தங்கமும் பொருளாதாரமும்: 

நமது நாட்டின் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் தங்கம் உள்ளது.  இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பினை உண்டாக்குகிறது. 

தங்கத்தின் இறக்குமதியினை குறைப்பதற்காக, 2016ம் ஆண்டு, அரசாங்கம் தங்க பத்திரங்களை (Sovereign Gold bonds) அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட தங்கத்தினை கட்டிகளாக வாங்குவதற்கு சமமானது. ஆனால், இங்கு தங்க கட்டிகளுக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பானது காகிதமாகவோ(paper form) அல்லது டிமேட் கணக்காகவோ(Demat Account) இருக்கும்.நேரடியான தங்கத்திற்கும், அரசு தங்கப்பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசத்தினை முழுமையாக பார்ப்போம்.

தங்கம் வளரும் விகிதம்: 

தங்கமானது சந்தை நிலவரப்படி விலை நிர்ணயிக்கப்பட்டு வளர்கிறது. இதில் தங்கத்தின் தரம் மற்றும் சில பல விஷயங்களால் அதன் விலை குறையலாம். தங்கத்தின் விலையானது எப்போதுமே ஏறும் என்று சொல்ல முடியாது. பணமானது வளராமல் போக வாய்ப்பு உண்டு.

வரிச்சலுகைகள்: 

தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது. தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ETF. மற்றும் Gold Mutual Fund கிடையாது. தங்க நகைகள் மீது 3 சதவீத GSTவிதிக்கப்படுகிறது.
தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு GST கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை. தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு TDS பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். 

தங்க பத்திரம்: 

சந்தை நிலவரப்படி விலை நிர்ணயிக்கப்பட்டு வளர்கிறது. இது தங்கபத்திரமாதலால், அன்றைய விலை தெளிவாக கிடைக்கிறது. மேலும், வட்டியும் தங்கத்திற்கு (2.5% தோரயமாக) அளிக்கப்படுவதால், அதிக பணமானது கிடைக்கிறது. தங்கத்தின் விலையானது எப்போதுமே ஏறும் என்று சொல்ல முடியாது. பணமானது வளராமல் போக வாய்ப்பு உண்டு.

பாதுகாப்பு: 

தங்கம் பத்திரமாக காப்பாற்ற வேண்டும். பாதிப்படையாமல்  வைத்திருக்க வேண்டும். அதேபோல திருடப்படவும் வாய்ப்புகள் உண்டு.ஆனால் தங்க பத்திரம் இது மெய்நிகர் தங்கமாதலால், திருடப்படும் வாய்ப்பு இல்லை. அரசாங்கத்தின் உத்திரவாதம் உள்ளதால், பாதுகாப்பாக இருக்கும் இதில் முக்கியமாக தங்கத்தின் நிகர எடை மதிப்பு மாறாமல் இருக்கும்.

வட்டி: 

 தங்கம் நகையாக கட்டியாக இருந்தால்  வட்டி ஈட்டித் தராது.
உதாரணமாக, ரூபாய். 1,00,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 6% வளருகிறது. என்றால், வருட முடிவில், 1,06,000 மட்டுமே கிடைக்கும்.
தங்கபத்திரத்தை வைத்திருப்பதால் அரசாங்கம் 2.5% வட்டி அளிக்கிறது. இது மிகவும் அருமையான தொரு பணம் பெருக்கும் வாய்ப்பு.
உதாரணமாக, ரூபாய் 1,00,000 முதலீடு ஒரு வருடத்தில், 6% வளருகிறது என்றால், வருட முடிவில், 2.5% வட்டி சேர்த்து, 8.5% வளருகிறது. 1,08,500 என்று கிடைக்கும்.

பணத்தை இழக்கும் அபாயம்: 

தங்கம் வீட்டில் வைத்திருந்தால் திருடப்படலாம். தங்கம் விலை குறையும் பட்சத்தில், பணத்தின் மதிப்பு  குறையும் அபாயம் உண்டு. ஆனால் தங்க பத்திரமாக இருப்பதால்  தங்கத்தின் விலை குறையும் பட்சத்தில் மட்டுமே, விலை குறையும் அபாயம் உண்டு.

வரி: 

தங்கம் குறுகிய கால(short term), மற்றும் நீண்ட கால(long term) ஆகிய முதலீட்டின் லாபம்(capital gains) சார்ந்த வரிகள் உண்டு.
தங்க பத்திரத்தின் மீது கிடைக்கும்  வட்டிக்கு மட்டுமே வரிகள் உண்டு.
பங்கு சந்தையில் 3 வருடங்களுக்கு முன் விற்றால், குறுகிய கால லாப வரியை உங்களது வருமானத்திற்கேற்ப செலுத்த வேண்டும்.

5 வருடத்திற்கு பின் 8 வருடத்திற்கு முன்பாக , வருடம் ஒரு முறை பணமாக மாற்ற முடியும். அப்போது, கடன் பத்திரங்களைப் போல், பணவீக்க குறியீட்டு (CII) எண்ணிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.
8 வருடங்கள் முழுவதும் வைத்திருந்து, பணமாக மாற்றும் போது, நீண்ட கால லாபத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம்: 

தங்கத்தை இறக்குமதி செய்வதால், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. அதேசமயம்
தங்க பத்திரமானது இங்கு தங்கமாக இறக்குமதி செய்யப்பட வில்லை. தங்கத்திற்கு சமமானது. அதனால், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது.

முதலீட்டின் பாதுகாப்பு:

தங்கத்தை இழந்தால் அல்லது திருடப்பட்டால் , மொத்த முதலீடும் உங்களுக்கு இழப்பு தரும். அதுவே தங்க பத்திரமாக இருந்தால்  அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கும். அதனால் இது பாதுகாப்பான முதலீடாகும். பணம் ஈட்டுவது தங்கத்தின் விலைக்கேற்ப மாறலாம்.

வாங்குமிடம்:

தங்கம் நாட்டில் உள்ள எந்த ஒரு நகைகடையிலும் வாங்கலாம். அதேபோல தங்க பத்திரத்தை மத்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை போல வங்கிகள், அஞ்சலகம் போன்ற பல்வேறு வழிகளில் வாங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் போது நீங்கள்  வாங்க  தவறி போய்விட்டீர்கள், என்றால் பங்கு சந்தையில்(secondary market) வாங்கிக் கொள்ளலாம்.

ஆபரணமாக மாற்றுவது: 

தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று ஆபரணமாக மாற்ற முடியும். ஆனால் தங்க பத்திரம் என்பது  மெய்நிகர் தங்கம் ஒரு பொருளாக உள்ள தங்கம் கிடையாது. எனவே முதலில் பணமாக மாற்றி, அதன்பிறகு  தங்க ஆபரணமாக வாங்க வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 25 பவுன் நகையாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவசர தேவைக்காக நகைகளை மட்டுமே பணமாக மாற்ற முடியும். ஆபரணத்தேவை இல்லாத பட்சத்தில் முதலீட்டிற்காக மட்டுமென்றால், நீண்ட காலத்தில், தங்கத்தினை விட பல வாய்ப்புகள் உள்ளன. 

அதிக வளரும் விகிதம் உடைய பங்கு சந்தை சார்ந்த Mutual Funds, கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகள் உள்ளன. எனவே, நீண்டகால நிதி திட்டமிடலில் 5–10% மட்டுமே,  தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தினை நேரடியாக வாங்குவதை விட, அரசு தங்க பத்திரம் மூலம் வாங்குவது என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவியது போலிருக்கும், முதலீட்டின் பரவாலக்கத்திற்கும் ஏதுவாகும். மேலும், எங்குமே தங்கத்தின் மூலம் கிடைக்காத, அரசாங்கத்தின் தங்கத்திற்கான வட்டி, முதலீட்டினை மேலும் பெருக்க உதவும்.