இந்தியாவில் உள்ள மதிப்புமிக்க பங்குகள் | Best Value Stocks & Top 5 Stocks In India.

இந்தியாவில் பட்டியிலடப்பட்ட  பங்குகள் ரூ.100 க்கும் குறைவான விலையில் பரிவர்த்தனையில் இருக்கும் சூழலில், ஒரு சில பங்குகள் மட்டும் பன்மடங்கு விலையில் வர்த்தகம் செய்கின்றன. இந்திய பங்குச் சந்தையில் அதிக விலை கொண்ட நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றைப் பற்றிய ஒரு அறிமுகம்.

 Shree Cements: 

இந்தியாவில் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இது 1979 ஆம் ஆண்டில் பட்டியிலடப்பட்டு இரண்டு பங்குச் சந்தையிலும் இணைக்கப்பட்டது. இந்த நிறுவனம் உள்ளார்ந்த வளர்ச்சியையும், புறநிலை வளர்ச்சியையும் அடைந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், ஸ்ரீ சிமெண்ட்ஸ் பங்கு விலையானது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. Shree Jung Rodhak, Bangur Cement, Rockstrong Cement ஆகியவை அதன் சில புகழ்பெற்ற அதிக வர்த்தகமாகும் பிராண்டுகளில் அடங்கும். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் ₹1 ட்ரில்லியன் அளவில் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில், நிறுவனத்தின் பங்கு விலை 26.5% வருவாயை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.

3M India:

 இந்தியாவில் 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 3M India வணிகம் பல்வேறு பிரிவுகளில் பரந்து காணப்படுகிறது. இந்தியாவில் நன்கு அறிமுகமான அதன் சில தயாரிப்புகளான ஸ்காட்ச் பிரைட், ஸ்காட்ச் டேப்புகள், போஸ்ட் இட்ஸ், ஸ்காட்ச்கார்ட் பசை மற்றும் பிசின்கள், பெயிண்ட் பாதுகாப்புத் தாள், ஜன்னல் பாதுகாப்புத் தாள், குறியீடுகள், பல் மருத்துவப் பொருட்கள், அறுவை சிகிச்சை மருத்துவ பொருட்கள் போன்றவையாகும். 

3M நிறுவனத்தின் பலதரப்பட்ட தயாரிப்புகள் இதன் பன்முகத்தன்மை கொண்ட அதன் சந்தையை எதிரொலிக்கும் சான்றாகும். நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ₹282.8 பில்லியன் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில், நிறுவனம் 107% முதலீட்டாளர்களுக்குத் திரும்ப வழங்கியுள்ளது.

MRF - Madras Rubber Factory: 

 இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி செய்யும் நிறுவனம். வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்வது மட்டுமன்றி சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் மட்டையை நினைவுறுத்துவதாக இருக்கிறது. 
டயர் உற்பத்தி மட்டுமில்லாமல், வண்ணப்பூச்சுகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் புகழ்பெற்ற பொம்மை பிராண்ட் ஆன ‘ஃபன்ஸ்கூல்’ ஆகியவற்றையும் தயாரிக்கிறது. MRF பட்டியலிடப்பட்ட பிறகு அதன் பங்கை ஒரு போதும் பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ இல்லை. நிறுவனத்தின் பங்குகள் இன்னும் துவக்க கால மதிப்பான ₹10 முக மதிப்பை மட்டுமே கொண்டுள்ளன. நிறுவனத்தின் பங்கு நவம்பர் 2012 இல் ₹10,000 விலை கொண்டதாக இருந்தது, பிப்ரவரி 2021 இல் உச்சபட்சமாக ₹98,575 ஐ எட்டியது. கடந்த ஓராண்டில் மட்டும் MRF பங்கின் விலை 25.3% உயர்ந்துள்ளது.  இந்தியாவில் சிறந்த டிவிடெண்ட் செலுத்தும் பங்குகள் | Best Dividend Paying Stocks in India.

Page Industries: 

Page Industries - என்பது இந்தியா, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை மற்றும் நேபாளத்தில் ஜாக்கி தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் உரிமம் பெற்ற ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். ஜாக்கி இன்டர்நேஷனல் தயாரிப்புகள் மட்டுமின்றி ஸ்பீடோ இன்டர்நேஷனலின் தயாரிப்புகளுக்கான பிரத்யேக உரிமத்தையும் Page Industries பெற்றுள்ளது. இந்த பங்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பன்முக வருமானம் கொண்ட பங்காக மாறிவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 1,600 % க்கும் அதிகமான வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ₹331.6 பில்லியன் ஆகும். எனினும், இது தொழில் P/E குறியீடான 195.5 மதிப்பிலிருந்து குறைவாக உள்ள 97.4 P/E இல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

 NESTLE INDIA:

நெஸ்லேவின் முதல் தொழிற்சாலை 1961 இல் தான் துவங்கப்பட்டது. இன்று இந்தியாவின் உணவு பிரிவில் ஒரு தனித்துவமான தொடர்பையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளது. நெஸ்லேவின் தயாரிப்புகளில் சில புகழ்பெற்ற பிராண்ட்கள் உண்டு.  Maggi வரம்பில் நூடுல்ஸ், சாஸ் மற்றும் மசாலாக்களும், பால் பொருட்கள் Milo, சன்ரைஸ் காபி போன்றவையும் அடங்கும். 
Nestle India  மிகவும் புகழ்பெற்ற சாக்லேட் பிராண்டுகளான Munch, Bar One, Milky Bar மற்றும்  Kit Kat போன்றவற்றை வைத்திருக்கிறது, இந்த பங்கு தற்போது 77.7 P/E இல் வர்த்தகம் செய்யப்பட்டு, ₹1.7 Ton சந்தை மூலதன மதிப்புக் கொண்டதாக உள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி? How To Invest Share Market Details In Tamil.

Honeywell Automation:  

 அமெரிக்காவின் ஹனிவெல் குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம், ஒருங்கிணைந்த தானியங்கு தொழில் நுட்பத்திலும், மென்பொருள் தொடர்பான தீர்வுகளை வழங்குவதிலும் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுக் கருவிகள், சென்சார் எனப்படும் உணர் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் போன்றவற்றில் பரந்த அளவில் தயாரிப்பு செய்யும் portfolio-வை கொண்டுள்ளது. 

இந்த நிறுவனம் 1987 ஆம் ஆண்டில் டாடா குழுமம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹனிவெல் தலைமை நிறுவனத்திற்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகத் துவங்கப்பட்டது. முன்னதாக “டாடா ஹனிவெல்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 2004-ல் இந்த கூட்டு நிறுவன ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தது. இந்த பங்கு அதன் 52 வார உச்ச விலையான ₹49,805 ஐ,  மார்ச் 2021 அன்று தொட்டது. ஒருங்கிணைந்த தானியங்கு தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தீர்வு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ₹355.9 பில்லியன் ஆகும். இந்த பங்கு கடந்த 5 ஆண்டுகளில் 400% க்கும் அதிகமான வருவாயை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.