Mutual Fund முதலீடு என்பது பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுவது மட்டுமல்லாது, சிறந்த ரிட்டர்னையும் தரவல்லது என்பதாலேயே, பலரும், இந்த Mutual Fund-களில் முதலீடு செய்ய அதிகளவில் முன்வருகின்றனர்.
நீண்டகால அளவிலான Mutual Fund-கள், முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான லாபத்தை தரவல்லதாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்கள் எனில், சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் அதிகரிக்கும்போதிலும், முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வகையிலான லாபம் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது.
நாட்டின் பொருளாதார மந்தநிலை, மற்ற துறையைப்போல, பங்குச்சந்தைகளிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கடந்த சில வாரங்களாக, பங்குவர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிலவிவருகிறது. Mutual Fund முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன் தரத்தக்க ஆண்டாகவே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
2020ம் ஆண்டின் பிற்பகுதிவாக்கில், நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (Assets Under Management ) என்பதன் அடிப்படையில், மில், ரூ.25.5 லட்சம் கோடிகள் உள்ளன. இவற்றில், ரூ.13.22 லட்சம் கடனாகவும், ரூ.7.16 லட்சம் பங்குச்சந்தைகளிலும், மற்றும் ரூ.3.28 லட்சம் கலப்பின திட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உங்களுக்காக நீண்டகாலம் அடிப்படையில் சிறந்த Mutual Fund திட்டங்கள்.
UTI Nifty Index Fund
2000ம் ஆண்டில், இந்த Mutual Fund துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 11 சதவீதம் வரை சராசரியாக ரிட்டர்னை வழங்கியது. பின்னர் 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் கால அளவிலான திட்டங்களுக்கு முறையே 15 சதவீதம், 8 சதவீதம் மற்றும் 9 சதவீத அடிப்படையில் ரிட்டர்னை வழங்கியது. இந்த திட்டங்கள் கவர்ச்சிகரமாக இருந்தபோதிலும், நீண்டகால திட்டங்களில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாமல் இருந்தது. செபி அமைப்பு சில விதிகளை தளர்த்தியபின்னும், இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்தியளிப்பதாக இல்லை. 2019 டிசம்பர் காலகட்டத்தில், Assets Under Management ல் ரூ. 1,793.60 கோடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Axis Blue Chip Fund:
2010ம் ஆண்டில், இந்த Mutual Fund திட்டம் துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 12 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. ஓராண்டு, 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 17.93 சதவீதம், 19.53 சதவீதம் மற்றும் 9.91 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. 2019 டிசம்பர் காலகட்டத்தில், Assets Under Management ல் ரூ. 8,749.21 கோடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Mirae Asset Large Cap Fund:
2008 ஆண்டில், இந்த Mirae Asset Large Cap Fund துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 15.6 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. ஓராண்டு, 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 12.28 சதவீதம், 15.85 சதவீதம் மற்றும் 11.37 சதவீதம் ரிட்டர்ன் வழங்கப்பட்டது. 2019 டிசம்பர் காலகட்டத்தில், Assets Under Management ல் ரூ. 15,896.69 கோடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. Mutal Fund குறித்து மேலும் அறிந்து கொள்ளவும்.
Kotak Standard Multi Cap Fund:
2009 ஆண்டில், இந்த Mutual Fund துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 13.73 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. ஓராண்டு, 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 13.17 சதவீதம், 6.17 சதவீதம் மற்றும் 13.73 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. 2019 அக்டோபர் காலகட்டத்தில், Assets Under Management ல் ரூ. 28,348 கோடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
SBI Banking and Financial Services Fund
2015 ஆண்டில், இந்த Mutual Fund துவங்கப்பட்டது. துவக்க காலத்தில் 15.53 சதவீதம் வரை ரிட்டர்ன் வழங்கப்பட்டது. ஓராண்டு, 3 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 24.15 சதவீதம், 21.22 சதவீதம் ரிட்டர்ன் வழங்கப்பட்டது. 2019 அக்டோபர் காலகட்டத்தில், Assets Under Management ல் ரூ. 1,200 கோடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.