இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. ஆனால் பலருக்கும் எதில் செய்வது என்பது தெரிவதே இல்லை. அப்படியே தோன்றினாலும் அதில் அதிகம் தங்கமாகத் தான். ஏனெனில் நம் எண்ணங்களோடு கலந்த, பாரம்பரிய முதலீடான தங்கத்தில் எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்? எதில் முதலீடு செய்வது?
இன்றைய காலத்தில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டது. அதிலும் இனி வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியெல்லாம் முதலீடு செய்யலாம்:
தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த நான்கு வழிகளை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது கோல்டு ETF. இரண்டாவது அரசின் தங்க இறையாண்மை பத்திரம், மூன்றாவது டிஜிட்டல் கோல்டு, நான்காவது தங்க ஃபண்ட்கள். கட்டி தங்கமாக வாங்குவதை விட, மேற்கண்ட பேப்பர் தங்கங்களில் முதலீடு செய்வது நல்ல விஷயம்.ஏனெனில் செய்கூலி சேதாரம் கிடையாது. விற்கும்போதும் விலை நிலவரத்திற்கு ஏற்ப விற்க முடியும், தள்ளுபடி இருக்காது.
கோல்டு ETF-ல் முதலீடு செய்யலாம்:
கோல்டு ETF-கள், பண்டுகள் மின்னனு வடிவில் நம்மிடம் இருக்கும். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்வது போன்றே கோல்டு ETF, கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாம். அங்கு பங்குகளில் உள்ளதை போல நீங்கள் விற்கவும் முடியும். வாங்க முடியும். அதோடு கோல்டு ETF-க்களை விற்கும் போது தங்கத்திற்கு உண்டான தொகையை முழுமையாக திரும்ப பெறுவீர்கள். இதனை Demat Account மூலம் அதற்கான Mutual Fund நிறுவனங்கள் மூலம் நீங்கள் இந்த வர்த்தகத்தினை மேற்கொள்ள முடியும். இது ஆபரண தங்கத்துடன் ஒப்பிடும்போது செலவுகள் குறைவு தான். தங்கத்தின் விலையுடன் பொறுத்தே இது வர்த்தகமாவதால், இதன் வெளிப்படையை தன்மைய நாம் அறிய முடியும்.
கோல்டு ஃபண்டுகள் என்றால் என்ன:
கோல்டு ஃபண்டுகள் என்பது, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்டு ETF-களில் முதலீடு செய்யக் கூடிய Equity Linked திட்டங்களாகும். இவை தங்கத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. இவ்வகை முதலீடுகளில் பணப்புழக்கம், தங்க விலைகளை நேரடியாக ட்ராக் செய்யும் கோல்டு ETF-க்களின் அடிப்படையிலேயே அமையும். கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளுக்கான பராமரிப்புக் கட்டணம், ETF உடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கும்.
டிஜிட்டல் கோல்டில் முதலீடு:
Paytm, AmazonPay உள்ளிட்ட டிஜிட்டல் வாலெட்களும், டிஜிட்டல் தங்கத்தை எளிதாக வாங்க வழி செய்கின்றன. தங்கத்தின் விலை போக்கிற்கு ஏற்ப வாங்கி விற்கலாம். பலன்கள், இந்த டிஜிட்டல் தங்கத்தில், 1 ரூபாய் எனும் குறைந்த அளவிலும் முதலீடு செய்யலாம் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான எளிய வழியாக இது அமைகிறது.
தங்க பத்திரத்தில் முதலீடு செய்யலாம்:
ஆரம்பத்தில் கட்டி தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, அரசு அறிவித்த ஒரு பாதுகாப்பான திட்டம் தான் அரசின் இறையாண்மை தங்க பத்திர திட்டம். இது தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுவாக தங்கம் முதலீடு என்றாலே கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்றுக் கொள்ள முடியும்.
கடன் வாங்கிக் கொள்ளலாம்:
பொதுவாக ஒரு நிதியாண்டில் ஒருவர் குறைந்த பட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உள்ளன. இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில் கட்டி தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்