இந்த காலத்த்தில் பல இளைஞர்கள் தங்களோட லட்சிய நாயகனா, தொழில் முனைவுக்கு முன் உதாரணமாக ஜாக் மா அவர்களைஉருவகப்படுத்தி இருக்கிறார்கள். அலிபாபா என்ற நிறுவனத்தினை பற்றி நீங்க கேள்விபட்டுருப்பீங்க. சீனாவில் இருக்கின்ற மிகப்பெரிய மின் வணிக நிறுவனம் (E-Commerce Site) அதோட நிறுவனர் தான் Jack Ma. சீனாவில் மின் வணிகம் பற்றி இருந்த கருத்தை ஒட்டு மொத்தமா மாற்றி அமைத்தது ஜாக் மாவோட அலிபாபா நிறுவனம்.
எதுவுமே இல்லாத நிலையில் இருந்து, இன்னைக்கு எதுதான் இல்லை என்கிற நிலைக்கு ஜாக் மா வந்து இருக்கார். எதுவுமே இல்லாத நிலையில் அலிபாபா நிறுவனத்தினை உருவாக்கி, அதன் மூலமா இன்னைக்கு உலகத்துல பல பேர்த்துக்கு உத்வேகத்த குடுத்துருக்காரு. இந்த வெற்றிக்கு முன்னாடி பல நிராகரிப்புகள் அவரோட வாழ்க்கைல இருந்தது. ஆனா இன்னைக்கு சீனாவோட தொழில் துறை மட்டுமில்லாம உலகத்துல தொழில் செய்யற ஒவ்வொருத்தருக்கும் தெரிஞ்ச ஒரு பேரா அலிபாபாவ உருவாக்கி இருக்கிறார் ஜாக் மா.
அக்டோபர் 15, 1964 ஆம் ஆண்டு ஹாங்சௌ என்ற இடத்தில் தான் ஜாக் மா பிறந்தார்.
இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை உண்டு. இவர்களின் இளமைக்காலத்தில் செல்வசெழிப்பான குடும்பமாக இவர்களது குடும்பம் இருக்கவில்லை. ஜாக் மா நன்றாக படிக்கக்கூடிய மாணவனும் இல்லை. ஆகவே பள்ளிப்படிப்புகளை சில வகுப்புகளை இரண்டு மூன்று முறை படித்துதான் கரையேறினார். ஒருவழியாக படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம் என்றால் வேலையும் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. KFC இல் மேலாளர் பணிக்கு விண்ணப்பித்த 24 பேர்களில் இவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை என தனது அனுபவங்களை குறிப்பிடும் போது ஜாக் மா சொல்கிறார். அந்த அளவிற்கு நிராகரிப்பு அவரை துரத்தியது.
படிப்பில் சுட்டியாக இல்லாவிட்டாலும் கூட கல்வி ஒன்று தான் ஒருவரை உயர்த்தும் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் ஜாக். அதேபோல ஆங்கில மொழி கற்றுக்கொள்வதிலும் அவர் ஆர்வத்தோடு பங்கேற்றார். இந்த ஆர்வத்தின் காரணமாக ஹாங்சௌ வில் இருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பித்தார். அங்கு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை. படித்து முடித்துவிட்டு வெளியே வந்த அவர் ஆங்கில ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவருக்கு சம்பளம் $10 தான். இவரிடம் பல மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று வெளியேறினார்கள். இதன் தொடர்ச்சியாக சியாங் காங் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை படிப்பையும் முடித்தார் ஜாக் மா.
ரொம்ப சீக்கரமாவே தோல்விகள் அவரோட வாழ்க்கைல துவங்கிருச்சு. சிறிய வகுப்புகள்ல 2 முறை, கொஞ்சம் மத்திய வகுப்புகள்ல 3 முறைனு உக்காந்து உக்காந்து தான் பள்ளியவே முடிச்சுருக்காரு ஜாக் மா. கல்லூரி நுழைவுத் தேர்வில் கூட 2 தரம் தோல்வி. சரி கல்லூரி படிப்பாவது சிறப்பா இருக்குமான்னு பாத்தா அதுவும் ரொம்ப சாதாரண மதிப்பெண்கள் தான் கொடுத்துச்சு. படிச்சு முடிச்சு இவரு விண்ணப்பிச்ச 50 வேலைகள் இவரை நிராகரிச்சுருக்கு.
கல்வியோடு சக்திய ஜாக் மா உணர்ந்திருந்தார்:
ஒருத்தரோட வாழ்க்கைல கல்வி எவ்வளவு முக்கியம் என்று ஜாக் மா உணர்ந்ததால் படிப்பு மேல அவருக்கு ஆர்வம் குறையவில்லை. ஆங்கில மொழி மேல அவருக்கு இருந்த ஆர்வம் அவர ஹாங் சௌ ஆசிரியர் மையத்துக்கு விண்ணப்பிக்க வைத்தது. 1988வது வருடம் இளங்கலை பட்டத்தோட ஜாக் மா படித்து முடித்து வெளியில் வந்தார். ஒரு ஆங்கில ஆசிரியராக பல காலம் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள ஜாக் மா உருவாக்கி இருக்கிறார். ஆங்கிலம், சர்வதேச வணிகம் இந்த ரெண்டு பாடங்களையும் ஹாங்சௌ டியான்சி பல்கலைக்கழகத்துல சொல்லிக்குடுத்தார் ஜாக் மா.
அவரோட நிறுவனத்த உருவாக்கிட்டு இருந்த சமயத்துல 2006ல சியாங் காங் பல்கலைக்கழகத்துல மேலாண்மை பட்டம் படித்து வாங்குனார் (MBA). ஒவ்வொரு விஷயத்தையும், தன்னோட வாழ்க்கையில் வந்த அனுபவம் மூலமா தோல்விகள் மூலமா கற்றகொண்டு அதில் இருந்து முன்னேறினாரு ஜாக் மா. சீனாக்கு வர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஊர் சுற்றி காட்டி, அவர்களிடம் பேசி பேசி, தன்னோட ஆங்கில அறிவ வளத்துக்கிட்டாரு ஜாக் மா. அது மட்டும் இல்லாமல், அந்த சுற்றுலா பயணிகளுக்கு கடிதம் எழுதவும் செய்தார். அதனால அவரோட ஆங்கில அறிவு இன்னும் அதிகமாயிற்று.
ஹார்வார்ட் பல்கலை இவரை அங்கு படிக்க அனுமதிக்கவில்லை ஆனா பாடம் கற்பிக்க அழைக்கும்:
நேர்காணல்களில் பல முறை ஜாக் மா தன்னோட வேலை தேடும் படலத்த பற்றியும், அதுக்கு முன்னாடி படிக்க முயற்சி செஞ்ச படலங்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார். காவல் துறையில் பணி புரிய விண்ணப்பித்த 5 பேரில் ஜாக் மாக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. இன்னொரு நேர்காணலில் KFC-ல் மேலாளராக பணிபுரிய விண்ணப்பிச்ச 24 பேரில் இவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை என்று சொல்லி இருக்கிரார். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிச்சும் அவருக்கு தோல்வி தான் மிச்சம்.
அலிபாபா நிறுவனத்த துவங்குவதர்க்கு கூட பல முறை முதலீட்டாளர்கள் இவரை நிராகரிச்சாங்க. காரணம் இந்த முறைல லாபம் பாக்க முடியாதுன்னு சொன்னாங்க.
ஜாக் மாவின் முதல் நிறுவனம்:
அலிபாபாவுக்கான விதை 1994-ல் இணையம் பத்தி ஜாக் மா கேள்விப்பட்டபோ விழுந்தது. அத பத்தி இன்னும் அதிகமா கத்துக்க 1995ல தன்னோட அமெரிக்கா நண்பர்கள் உதவியோட அமெரிக்கா போய் கத்துக்கிட்டாரு. முதல் முதலாக கூகிள் தேடு பொறியில் அவர் கேட்ட கேள்வி, சீனால கிடைக்கற பீர் பத்தினது. ஆனா அதுக்கு பதில் இல்ல. அடுத்து சீனாவ பத்தி எந்த கேள்விக்கும் பதில் இல்ல. இதன் மூலமா சீனால இருக்கற வாய்ப்புகள் பத்தி உணர ஆரம்பித்தார் ஜாக் மா. இதன் மூலமா தன்னோட நண்பனோட இணைந்து, ஓரு வலைதளத்த உருவாக்கினார். இது சீனர்கள் மத்தியில பிரபலமாகிற்று. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்த நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கி குடுக்கற ஒரு நிறுவனமா மாற்றினார்.
ஜாக் மாவின் முதல் நிறுவனம்:
அலிபாபாவுக்கான விதை 1994-ல் இணையம் பத்தி ஜாக் மா கேள்விப்பட்டபோ விழுந்தது. அத பத்தி இன்னும் அதிகமா கத்துக்க 1995ல தன்னோட அமெரிக்கா நண்பர்கள் உதவியோட அமெரிக்கா போய் கத்துக்கிட்டாரு. முதல் முதலாக கூகிள் தேடு பொறியில் அவர் கேட்ட கேள்வி, சீனால கிடைக்கற பீர் பத்தினது. ஆனா அதுக்கு பதில் இல்ல. அடுத்து சீனாவ பத்தி எந்த கேள்விக்கும் பதில் இல்ல. இதன் மூலமா சீனால இருக்கற வாய்ப்புகள் பத்தி உணர ஆரம்பித்தார் ஜாக் மா. இதன் மூலமா தன்னோட நண்பனோட இணைந்து, ஓரு வலைதளத்த உருவாக்கினார். இது சீனர்கள் மத்தியில பிரபலமாகிற்று. அந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்த நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கி குடுக்கற ஒரு நிறுவனமா மாற்றினார்.
முதல் மூன்று வருடத்தில்...
முதல் மூணு வருஷத்துக்குள்ள அவரோட நிறுவனம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுது. அடுத்ததா ஜாக் மா ஒரு IT நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியா பொறுப்பு ஏத்துக்கிட்டாரு. அந்த நிறுவனத்த சீனாவோட சர்வதேச மின்னணு வர்த்தக மையம் நிறுவியிருந்தாங்க. அது அரசோட அயல்நாட்டு வணிகம் மற்றும் பொருளாதார துறை கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நேரத்தில் தான் அலிபாபா அவரோட மனதில் உதித்தது. நண்பர்களுடன் உதயம்! அதனால் 1999ல் அந்த நிறுவனத்துல இருந்து வேலைய ராஜினாமா செய்தார் ஜாக் மா.
தன்னோட சொந்த ஊரான ஹாங் சௌக்கு வந்து 17 நண்பர்களோட சேர்ந்து அலிபாபாவ துவங்கினார். முதலில் அலிபாபா சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கிற சவால்கள் எப்படி தீர்த்து வெக்கிறது என்று முயற்சி செஞ்சது. அதோட நிற்காகாமல் மின் வர்த்தகத்தில் உலகம் முழுவதும் என்ன என்ன சவால்கள் இருக்கோ, அத தீர்த்து வெக்கணும்னு ஜாக் மா கனவு கண்டார்.
தன்னோட சொந்த ஊரான ஹாங் சௌக்கு வந்து 17 நண்பர்களோட சேர்ந்து அலிபாபாவ துவங்கினார். முதலில் அலிபாபா சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கிற சவால்கள் எப்படி தீர்த்து வெக்கிறது என்று முயற்சி செஞ்சது. அதோட நிற்காகாமல் மின் வர்த்தகத்தில் உலகம் முழுவதும் என்ன என்ன சவால்கள் இருக்கோ, அத தீர்த்து வெக்கணும்னு ஜாக் மா கனவு கண்டார்.
அலிபாபா சீனாவின் பல ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களோடு தொடர்பு கொள்ள உதவியது. அதன் மூலம் அவர்கள் தொழில் வளர உதவியது. அவர்கள் தொழில் வளர வளர அலிபாபாவும் மிகப்பெரிதாக வளர்ந்தது. "சாப்ட் பேங்க்" மற்றும் "கோல்ட்மேன் சாக்ஸ்" இரண்டும் அலிபாபாவில் முதலீடு செய்து அதனை மேலும் பெரிதாக்கினர். அலிபாபா ஒரு திடமான நிலைக்கு வந்த பின்பு, 2003ஆம் ஆண்டு ஜாக் மா டோபியோவை அறிமுகப்படுத்தினார்.
இரண்டே ஆண்டுகளில்:
துவக்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சந்தையில் மிகப்பெரிய இடத்தை எப்படடியோ பிடித்தது. தற்போது அலிபாபா 9 கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. அரசு கோலோச்சி வந்த துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்தாக சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. தற்போது சீனாவில் பல தயாரிப்பு நிறுவங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது.
இரண்டே ஆண்டுகளில்:
துவக்கிய இரண்டு ஆண்டுகளிலேயே சந்தையில் மிகப்பெரிய இடத்தை எப்படடியோ பிடித்தது. தற்போது அலிபாபா 9 கிளை நிறுவனங்களை கொண்டுள்ளது. அரசு கோலோச்சி வந்த துறைகளிலும் கால்பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. அடுத்தாக சினிமா தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. தற்போது சீனாவில் பல தயாரிப்பு நிறுவங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது.
அலிபாபா மற்றும் ஜாக் மா:
தொழில் முனையும் பலரின் கனவுகளில் இந்த இரண்டு வார்த்தைகளும் வந்த வண்ணம் நிலைத்து நிற்கும். அடுத்த சந்ததியினருக்கு புதியதொரு வழி காட்டியுள்ளது அலிபாபா. ஜாக் மா வாழ்வில் இருந்து பலவற்றை நாம் கற்க இயலும். ஒரு நிறுவனத்தை துவங்க, ஒருவர் பணக்காரராகவோ , முன் அனுபவம் வாய்ந்தவராகவோ இருத்தல் அவசியம் இல்லை. தேவையான ஒன்றாக தொலை நோக்குப்பார்வையும் வாய்ப்புகளை கண்டறியும் திறமையும் கூறலாம். பாடம் மற்றுமொரு பாடம் நாம் ஜாக் மாவின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டியது, தோல்விகளை எவ்வாறு வெற்றிக்கு படிகளாக மாற்றுவது என்பதை. ஒவ்வொரு தோல்விக்கும் ஜாக் மா துவண்டிருந்தால் இன்று நாம் அலிபாபாவை பார்த்திருக்க இயலாது.
ஜாக் மா சொல்லும் ரகசியம்:
பில் கேட்ஸ் , வாரன் பப்பெட், மார் ஷூக்கர்பெர்க் , லாரி பேஜ் என பலரும் சாதித்ததற்கு மிகப்பெரிய காரணம் என்ன தெரியுமா? அவர்கள் காலத்தை குறை கூறாமல் பிறர் சந்தித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். இளைஞர்களுக்கு செய்தியாக ஜாக் மா சொல்வது என்னவென்றால் நீங்கள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் இருக்கின்ற நூற்றாண்டில் வாழும் வாய்ப்பை பெற்று இருக்கிறீர்கள். இளைமை பருவமும் கூடவே இருக்கிறது. குறை கூறாதீர்கள், குறை கூறினால் உங்களது பார்வைக்கு வாய்ப்புகள் தெரியாமல் போய்விடும். ஆகவே வாய்ப்புகளை தேடுங்கள், அதில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். இன்றைய தலைமுறைக்கு மாலை பொழுதில் நல்ல யோசனைகள் தோன்றுகின்றன
அதிகாலை எழுந்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு எப்போதும் போல வேலைக்கு செல்ல துவங்கிவிடுகிறார்கள். இதுதான் பிரச்சனை. ஒரு சிறந்த தொழில்முனைவோராக உருவாவதற்கு பிறர் சிந்திப்பதற்கு முன்னதாக நீங்கள் சிந்திக்க வேண்டும். பிறர் எழுவதற்கு முன்னதாக நீங்கள் எழ வேண்டும். மற்றவர்களை காட்டிலும் தைரியம் மிக்கவராக நீங்கள் இருக்க வேண்டும். யார் நம்புகிறார்கள் என்பது முக்கியமில்லை. உங்களது நண்பர்கள், முதலீட்டாளர்கள், நண்பர்கள் எவர் நம்பாவிட்டாலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தொடர்ந்து போராடுங்கள். உங்களுக்குள் ஓர் குரல் கேட்கும் அந்த குரலுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். தோல்வி அடையுங்கள் ஆனால் மீண்டும் எழுந்து விடுங்கள்.