இன்றைய கால கட்டத்தில் , பணத்தின் தேவை நாளுக்கு, நாள் அதிகமாகி கொண்டேயிருக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை. நாளுக்கு, நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடு,கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. நாம் Bank Fixed Deposit, Mutual Fund மற்றும் பல நிதி திட்டங்களில் முதலீட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பற்றாது. அதில் பணத்திற்கு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இருந்தாலும், நம் முதலீட்டின் மூலம் கிட்டும் வருவாய் மிக குறைவு.
இதையே பங்குகளில் முதலீட்டினால் வருவாய் அதிகம் கிட்டும். ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், ஒரு நீண்டகால நோக்கில் பங்குகளில் முதலீட்டினால், ஆபத்தின் அளவு அறவே இல்லை என்றும் கூறலாம். மேலும் அது தரும் லாப பங்குதொகை மற்றும் வெகுமதி பங்குகளால், நம் முதலீட்டின் வருவாய் அதிகரித்து கொண்டே இருக்கும்.
மேலும் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் , அந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிறோம். பங்குகளை பல ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பதனால், நமக்கு லாப பங்குதொகை கிடைப்பததோடு அல்லாமல் சில சமயங்களில் நிறுவனம் வெகுமதி பங்குகளையும் கொடுக்கும். இதனால் பங்குகளின் எண்ணிக்கையும் கூடும். அதிக வருவாயும் கிடைக்கும்.
பங்கு வர்த்தகம் பற்றி நன்கு அறிந்துகொள்ளுங்கள்:
பணக்காரர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை மாறிவிட்டது.
நிறைய பேர் பங்கு வர்த்தகம் செய்வதன் உடனடியாக பணம் பார்த்துவிட நினைக்கிறார்கள். அது சாத்தியப்பட வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பற்றி நன்றாக அறிந்து கொள்வது அவசியம். கற்று , கேட்டறிந்து , செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .
பங்குகளை வாங்குவது எப்படி:
DEPOSITORY PARTICIPANTS
இது ஒரு வங்கி போல செயல்படும் அமைப்பு. பங்கு வைப்பகத்தின் பிரதிநிதியாக செயல்படுபவர்கள். வங்கிகளில் கணக்கு இருப்பது போல முதலீட்டாளர்களின் பங்கு, பத்திரங்கள் போன்றவற்றை உருவமற்ற மின்னணு வடிவில் (Demat) கணிப்பொறியில் வைத்திருப்பார்கள். காகிதங்களில் உள்ள பங்கு பத்திரங்களை மின்னணு முறைக்கு மாற்றியும் தருவார்கள். பங்கு வர்த்தக சேவையும் அளிப்பார்கள். பங்கு வைப்பக பங்கேற்போர் ஒரு பாதுகாப்பாளர் மட்டும் அல்ல. ஒருபடி மேலாக அவர்கள் ஒருவரின் பங்குகளை மற்றவருக்கு மாற்றி அளிக்க சட்டபூர்வ அனுமதி பெற்றவர்கள்.
தினசரி வர்த்தகத்திற்காக இவர்களிடம் அதி நவீன தொழிற் நுட்பமுடைய இணையதள சேவை வசதியும் உண்டு. இவற்றை பயன்படுத்த அவர்களுக்கு வருட கட்டணம் செலுத்தினால், நம்மை வர்த்தகம் செய்ய அனுமதிப்பார்கள்.
Depository Participants சேவைகள்:
Demat செய்வது அதாவது பங்குகள் காகித வடிவில் இல்லாமல் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வது. மீண்டும் காகித வடிவில் கொண்டு வருவது. பங்குகளை மாற்றிவிடுவது. பங்கு முதலீட்டாளர்களின் விருப்ப படி, மற்றவருக்கு பங்குகளை மாற்ற உதவுவார்கள். தினசரி பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டால் அன்றைய கணக்குகளை தீர்ப்பது. பங்குகளின் மேல் கடன் முதலானவற்றுக்கு Demat வடிவ பங்குகளை அடமானம் வைக்க உதவுவது உரிமைப் பங்கு / லாப பங்கு / உபரி பங்குகளை உடனடியாக நம் கணக்கிற்கு தருவிப்பது மோசடி / குளறுபடி ஏற்படாமல் பாதுக்காப்பது.
Depository Participants (DP) யினால் கிடைக்கும் நன்மைகள்:
வாங்கும் பங்குகள் தவறாமல், உரியவரிடம் போய் சேரும். பங்குகள் இடம் மாறுவது தவிர்க்கப்படும். பங்குகளை அவரவர்க்கு உடனடியாக மாற்றமுடியும் பத்திரப்பதிவு தொகை தவிர்க்கப்படும் ...பணம் மிச்சம் தானே பத்திரம் தொலைந்து போதல் மற்றும் தவறான உபயோகத்திற்கு உள்ளாதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் .
Depository Participants (DP) எனப்படும் இவர்கள் NSDL எனும் தேசிய பாதுகாப்பு வைப்பகம் , மற்றும் CSDL எனும் மத்திய வைப்பக சேவை -யகத்திற்க்கும், முதலீடு செய்பவர்க்கும் இடையே பிரதிநிதியாக செயல்படுபவர்கள் .
பங்கு வைப்பகம் விதிக்கும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வைப்பக பங்கேற்போர் நடப்பார்கள். முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய மிக உதவியாக இருப்பார்கள்.
SEBI - Securities and Exchange Board of India எனப்படும் இந்திய பரிவர்த்தனை மற்றும் பாதுகாப்பு வாரியம் அமைப்புடன் இவர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள் . செபியுடன் பதிவு செய்து சான்றிதழ் பெற்று பங்கு பரிவர்த்தனை சேவைகளை அளிப்பார்கள். இவற்றிக்கு அடையாள எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
Depository Participants -போரிடம் கணக்கு ஆரம்பிக்க நமக்கு PAN Card நமது பெயரில் இருக்க வேண்டும். இந்த எண்ணையும், நமது வங்கியின் கணக்கு எண்ணையும் இவர்களிடம் அளித்தால், நமக்கு பங்கு வர்த்தகம் செய்ய ஒரு அடையாள எண்ணை நமக்கு வழங்குவார்கள். பின்னர் வைப்பக பங்கேற்போரிடம் , நமது வங்கி காசோலையை கொடுத்து பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.
Pan Card -ன் முக்கியதுவம்:
இது வருமானவரித்துறையினரால் கொடுக்கப்படுவது வரி கட்ட வேண்டியவர்களுக்கு கொடுக்கப்படும் அடையாள எண் . தற்போது இந்த எண் ஏராளமான இடங்களில் கேட்கப்படுகிறது வங்கி கணக்கு துவங்க போன் இணைப்பு வாங்க சம்பளம், தொழில்முறை சேவைகளுக்கான கட்டணம் வாங்க என்று பல விஷயங்களுக்கு தேவை படுகிறது.
இது தேசிய மட்டத்தில் கொடுக்கப்படுவதால் நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் உபயோகப்படுத்தலாம். அடையாள அட்டையாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நிரந்தர கணக்கு எண் அட்டை கிடைக்குமிடங்கள்.
• வருமான வரித்துறை அலுவலகம்
• பங்கு வைப்பக சேவை அமைப்பு UTI
• நிதிசேவை அமைப்பு
நிரந்தர கணக்கு எண் அட்டை பெறுவது எப்படி:
நிரந்தர கணக்கு எண்- க்கான படிவத்துடன் கீழ்கண்டவைகளில் சிலவற்றை இணைக்க வேண்டும்
பாஸ்போர்ட் ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பள்ளி சான்றிதழ் கல்லூரி பட்டம் கடன் அட்டை வங்கி கணக்கு புத்தகம் குடும்ப அட்டை தண்ணீர் வரி கட்டிய ரசீது சொத்து வரி ரசீது
இவை அனைத்தில் ஏதேனும் இரண்டு நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சேர்த்து ரூ 65 பணத்துடன் அருகாமையில் உள்ள நிரந்தர கணக்கு எண்- க்கான சேவை மையத்தில் சேர்ப்பித்தால் ஒரு மாதத்திற்குள், உங்களின் புகைப்படம் ஒட்டிய நிரந்தர கணக்கு எண் அட்டை உங்கள் வீடு தேடி வந்து சேரும் .
DEMAT கணக்கு துவங்க என்ன செய்ய வேண்டும்:
• நிரந்தர கணக்கு எண் அட்டை இருக்க வேண்டும்
• உள்ளூர் வங்கி கணக்கு எண்
• இரு புகைப்படம்
• ஆதார் கார்டு நகல்
• அடித்து புரந்தள்ளப்பட்ட வங்கி காசோலை பங்கு வைப்பக பங்கேற்போர் கேட்கும் வங்கி காசோலை
ஒரு வங்கி கணக்கு துவக்குவது போலத்தான் இதுவும் .
எந்த பங்கு வைப்பக பங்கேற்போர் இடம் டிமாட் கணக்கு துவங்க விரும்புகிறீர்களோ அவரிடம் இதற்கான விண்ணப்பம் பெற வேண்டும் . அவற்றை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிய பின்னர், 5 முதல் 10 நாட்களுக்குள் உங்கள் கைகளில் டிமேட் எண் வந்துவிடும். உங்கள் பங்குகளை பற்றிய கணக்குகள் டிஜிடல் வடிவில் வைத்துக்கொள்வார்.
Demat Account -ன் நன்மைகள்:
பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு வசதியானதும் , பாதுகாப்பானதும் கூட உடனடி பங்கு வர்த்தக பரிமாற்றத்திற்கு காணாமல் போகாது /திருட்டு போகாது /தொலையாது பத்திர பதிவு கட்டணம் கிடையாது வாரிசுதாரர் நியமனம் உடனடி முகவரி மாற்றம் ஒரே தடவையில் உங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி பங்குகளில் இருந்து வரும் பங்கின் லாபம் / உபரி பங்குகள் / உரிமைப் பங்குகள் ஆகியன அனைத்தும் தானாகவே உங்கள் கணக்கில் வந்து சேர்த்தல்
Demat கணக்கை வங்கிகளில் துவக்கலாம். SBI, ICICI, HDFC, AXIS இன்னும் பிற வங்கிகளும் இந்த சேவையை அளிக்கின்றன. இதனால் உங்களுக்கு அவர்கள் பல வசதிகள் செய்து தருவார்கள். கணக்கு துவங்க வழக்கம் போல உங்கள் அடையாள அட்டை, முகவரி சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.