Power Of Attorney என்றால் என்ன? What Is Power Of Attorney Details In Tamil.

நம்பிக்கையான ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பொது பவர் ஆப் அட்டார்னி அல்லது  சிறப்பு பவர் ஆப் அட்டார்னி  பவரை ஆவணம் செய்து (பத்திரம்,  முத்திரை தாளில்) தமிழக அரசு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும். சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.

அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்ற பின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) அதிகார பத்திரம் (Power of Attorney) பதிவு செய்ய வேண்டும். அதில் தம்மால் நியமிக்கப்படுபவருக்கு எதற்கெல்லாம் அதிகாரம் (Power) கொடுக்கப்படுகிறது என விபரங்கள் இருக்கும்.

Power Of Attorney – 2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.

Power of Attorney எதற்கெல்லாம் உதவும்:

1. சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.

2. வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய (visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.

3. சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.

4. எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.

Power of Attorney இரண்டு வகைப்படும்:

• பொது அதிகார பத்திரம் (General Power of Attorney)

• தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney)

பொது அதிகார பத்திரம் - General Power of Attorney: 

இதில் Power of Attorney -யாக நியமிக்கப்படுபவருக்கு சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைப்பிரிவுகளாக பிரிக்க மற்றும் அரசு அலுவலகங்களில் சொத்துதொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இட முதலிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

ஜெனரல் பவர் ஆப் அட்டார்னிக்கு சொத்து கிரையம் செய்யும் அதிகாரம் உண்டு எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் தான் கட்டாயம் பதிய வேண்டும். ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி பொறுத்தவரை எழுதி கொடுப்பவர் எழுதி கொடுத்த தேதியில் இருந்து 3௦ நாட்கள் வரை தான்  உயிருடன் உள்ளார் என்று பதிவு அலுவலகம் ஒத்துகொள்ளும் அதற்கு பிறகு பவர் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார் என்று அரசு மருத்துவரிடம் இருந்து லைப் சர்டிபிகேட் பெற்று பவர் வாங்கிய ஏஜென்ட் பதிவு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

தனி அதிகார பத்திரம் - Special Power of Attorney: 

இதில் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படும் (எ.கா) சொத்தை விற்க அல்லது மனைப் பிரிவுகளாக பிரிக்க மட்டும் என்பது போன்ற செயல்கள். மேற்கண்ட செயலைத் தவிர வேறு எதையும் அவரால் செய்யமுடியாது.

ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி பத்திரம் சொத்து கிரையம் சம்பந்தம் இல்லாத வேலைகளுக்கு அதிகாரம் கொடுக்கலாம். அதனை பத்திர அலுவலகத்தில் பதிவும் செய்யலாம் அல்லது நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அத்தாட்சி பெற்று பவர் எழுதி கொடுக்கலாம்.ஸ்பெசல் பவர் ரூ.20 பொது பவர் ரூ.100 , பணம் வாங்கிய பவர் & கொடுத்த தொகைக்கு 4% என முத்திரைதாள் வாங்க வேண்டும்.

நீங்கள் வாங்க நினைக்கும் சொத்து எந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub Registration Office) பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்குதான் Power of Attorney பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம். அதனால் வில்லங்க சான்றிதழில் (EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் ) இந்த விவரம் (Entry) இருக்காது. இப்படி EC-ல் entry வராத காரணத்தினால் Power of Attorney -யிடம் சொத்து வாங்குபவரால் அது ரத்து செய்யப் பட்டிருக்கிறதா? என்ற விவரத்தை தெரிந்து கொள்ளமுடிவதில்லை. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1.நாம் சொத்து வாங்கும் போது நமக்கு அந்த சொத்தை விற்பனை செய்பவர் Power of Attorney-ஆக இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் Power of Attorney பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கு நகல் (Copy of Document) விண்ணப்பம் செய்து பெறவேண்டும். அதில் இந்த Power of Attorney ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனுடைய விவரம் குறிக்கப்பட்டிருக்கும். நகல் பெறுவதற்கு சொத்தின் உரிமையாளர் அல்லது Power of Attorney இருவரில் ஒருவர் தான் விண்ணப்பம் செய்ய முடியும்.

2.சொத்தின் உரிமையாளரிடம் நேரிடையாக பேசி Power of Attorney ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வது மிகவும் நல்லது. உரிமையாளரிடம் பேசாமல் எந்த ஒப்பந்தமும் Power of Attorney-யிடம்செய்யக்கூடாது.

எத்தனை ஏஜெண்டுகள்:

பொதுவாக ஜெனரல் பவர் ஆப் அட்டார்னியில் ஒரே ஒரு ஏஜென்ட்டை மட்டும் நியமிப்பார்கள், ஒன்றிற்கு  மேற்பட்ட ஏஜென்ட்களை நியமிக்கலாம்  அதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. நியமிக்கப்படும் ஏஜென்ட்கள் , சேர்ந்தே கையெழுத்து இட வேண்டுமா அல்லது தனி தனியாக கையெழுத்து இட்டு வேலைகளை செய்ய வேண்டுமா என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். எதுவுமே குறிப்பிடாமல் இரண்டு நபருக்கு பவர் கொடுத்தால் இரண்டு பேருமே சேர்ந்தே அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . ஆவணங்களில் இரு நபருமே கையெழுத்து இட வேண்டிய நிலை இருக்கும்.

பவர் ரத்து:

தேவை ஏற்பட்டால் நியமித்த ஏஜென்ட்டை/ஏஜெண்ட்டுகளை நீக்கமும் செய்யலாம், அதற்கு தனியாக பவர் ரத்து பத்திரம் ஒன்று எழுதி பத்திர அலுவலகத்தில் பதிய வேண்டும். ஒரு ஏஜென்ட்டை நியமித்து அவரை நீக்கும் வரை அந்த ஏஜென்ட் செய்த எல்லா வேலைகளும் பவர் கொடுத்தவரை கட்டுபடுத்தும். ஏஜென்ட் செய்த வேலைகள் எல்லாம் சட்டப்படி பவர் கொடுத்தவர் செய்த வேலைகளாகவே கருதப்படும்.

பணபரிமாற்றம்:

பொதுவாக பவர் பத்திரத்தில் எழுதி கொடுப்பவர் , எழுதி வாங்குபவரிடமிருந்து எந்த பணமும் வாங்கவில்லை என்ற உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும். பணபரிமாற்றம் நடந்திருக்கும் பொது அதற்க்குரிய  முத்திரைதாள் & பதிவு கட்டணம் கட்ட வேண்டும். இவ்வாறு பணபரிமாற்றம் நடந்து வழங்கிய பவரை ரத்து செய்ய இயலாது. இதனை ” IRREVOCABLE POWER OF ATTORNEY” என்று கூறுவர்.

முத்திரைதாள் செலவுகளை மிச்சம் செய்வதற்காக சிலர் பணம் வாங்கி கொண்டு , பவர் பத்திரத்தில் பணம் வாங்கவில்லை என்று எழுதி கொள்வர், அப்பொழுது பணபற்று ரசீது தனியாக ஒரு பத்திரம் மூலம் எழுதி கொள்வர், பத்திரம் மற்றும் பணபற்று ரசீதும் ஒரே தேதியிலோ அல்லது அதற்கு மறுநாளோ இருந்தால் சட்டம் அதனை கிரையம் என்றே கருதுகிறது. பணம் பெற்றவர் பின்னாளில் பவர் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது , அதனை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாக உள்ளது.

பவர் validity:

ஒரு ஏஜென்ட்டை நியமித்து விட்டு , அந்த ஏஜென்ட்டை நீக்கமால் பவர் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டாலோ , மனநிலை பாதிக்கபட்டலோ, அந்த பவர் பத்திரம் செல்லாதாகி விடும்.