சேமிப்பு என்பது நீங்கள் கடினமாக உழைத்த வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் நன்கு திட்டமிட்டு சேமிப்பது ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் பத்து ரூபாய் சம்பாதித்தால் அதில் நீங்கள் 1 ரூபாயை சேமிக்கவேண்டும். அதே போன்று தான் விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வார்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்தில் அல்லது வருமானத்தில் செலவுகள் போக இருக்கின்ற வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினால் அதுவே நல்ல சேமிப்பு. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் சேமிக்க கற்றுக் கொடுங்கள். அதாவது உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தபால் நிலையங்களில் சிறு சேமிப்பு கணக்கை உங்களது பிள்ளைகளுக்கு திறந்து அதன் மூலம் அவர்களை நீங்கள் சேமிக்க கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தலாம்.
சிக்கனம் தான் சேமிப்பின் முதல்படி:
சேமிப்பின் அருமையை நாம் வட நாட்டவரிடம் நன்கு உணர முடியும். அவர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அவர்களின் சேமிப்பு மற்றும் எதிர்கால வருமான திட்டம். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு அது 1 பைசாவாக இருந்தாலும் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணத்தை பெருக்குவதே காரணம். இன்றைய சேமிப்பே நாளைய உங்களது பெருஞ்செல்வத்தின் எதிர்காலமாகும். சேமிக்க பல வழி வகைகள் இருப்பினும் அவசியமற்றவற்றை தவிர்த்து வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு உங்களின் வருமானத்தை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்தால் சேமிப்பும் உங்களுக்கு சாத்தியமான ஒன்றாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சிக்கனம் தான் சேமிப்பின் முதல்படி:
நீங்கள் சேமிக்க எண்ணினால் உங்களுக்கு சிக்கன மனோபாவம் வந்தால் போதும். சிக்கன மனோபாவம் என்பது, தேவைக்கு அதிகமான எதையும் குறைத்துக் கொள்வது. தேவைக்கு அதிகமாக தூங்குவது, தேவைக்கு அதிகமாக பல்துலக்க பேஸ்ட் பயன்படுத்துவது, தேவைக்கு அதிகமான தண்ணீரை பயன்படுத்துவது, தேவைக்கு அதிகமாக உணவு பொருளை வாங்கி வீணடிப்பது, தேவைக்கு அதிகமான ஆடைகளை பராமரிப்பது… இப்படி அன்றாட நிகழ்வில் பறவைகளை குறிப்பிடலாம் இவைகளை ஒழுங்குபடுத்தினாலே சிக்கனமும், சேமிப்பும் கைக்கொள்ளும்.
சேமிப்பின் அருமை எல்லோருக்கும் தெரியும், ஆனால் அதை யாரும் பின்தொடர்வதில்லை. ஏனென்றால் இன்றைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை என்று பலரும் தங்களை ஏமாற்றி வருகிறார்கள். உண்மையில் சேமிப்பு என்பது உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும். எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு கஷ்டங்கள் வரும், அதை எதிர்கொள்ள இந்த சேமிப்பு உதவும். நாம் சேமிப்பதற்கான சில வழிகளை இங்கே காணலாம்.
மாத சம்பளத்தினை அட்டவணை செய்க:
நாம் நம்முடைய மாத சம்பளத்தை வாங்கிய உடன் அதை வாங்கிய நாள் முதல் செலவு செய்ய தொடங்கி விடுகிறோம். இதனால் நம்முடைய சம்பளப் பணம் எங்கே செல்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. எனவே நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தையும் அடுத்த 30 நாட்களுக்கு எழுதி வையுங்கள். பிறகு நீங்கள் முப்பதாவது நாள் எந்த பொருட்களை உபயோகிக்காமல் அப்படியே இருந்தது, தேவையான பொருள், தேவையற்ற பொருளை எல்லாவற்றையும் பாருங்கள். அதில் நீங்கள் எவ்வளவு பணத்தை வீணாக்கி உள்ளீர்கள் என்பதைக் கணக்கிடுங்கள். இதுதான் உங்களின் அடுத்த மாதத்திற்கான சேமிப்பு. How To Make A Home Budget And Step By Step Guide In Tamil / ஒரு வீட்டு பட்ஜெட்டை எவ்வாறு உருவாக்குவது மற்றும் படி வழிகாட்டியாக தமிழில்.
10 சதவீத பணத்தை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள் நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் எப்போதும் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு ஆடைகள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு மேம்பாட்டு பொருட்கள் என தேவை மற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்குகிறோம். இதனால் நமது சம்பளம் மிக விரைவில் முடிவடைந்துவிடும். எனவே நீங்கள் எப்போதும் உங்கள் சம்பள பணத்தில் இருந்து 10% சேமித்தால் அது இறுதியில் உங்களுக்கு உதவும். அப்படி செலவுகள் சரியாக செய்து விட்டால் இறுதியில் அந்த 10 சதவீத பணம் உங்களுக்கான சேமிப்பாக மாறிவிடும். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நீங்கள் சிறிய தொழில் செய்வதற்கான பணம் உங்களிடம் வந்தடையும். எனவே எதிர்காலம் அழகாக இருப்பதற்கு 10 சதவீத சேமிப்பு சிறந்தது.
10 சதவீதம் கூடுதலாக சம்பாதியுங்கள்:
சேமிப்புகள் என்னதான் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் நம்முடைய சம்பாத்தியமும் அதிகமாக வேண்டும். எனவே முடிந்த வரை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது சிறிய வேலையை செய்து பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள், அல்லது இணையதளம் மூலமாக பணத்தைச் சம்பாதியுங்கள். இது உங்கள் சேமிப்பை அதிகரித்து உங்கள் கஷ்டங்களை குறைக்கும்.
செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்:
மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்கு செல்வீர்கள். எனவே செல்வதற்கு முன்பாக உங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே வாங்குவதன் மூலமாக உங்கள் பணம் மிச்சமாகும். எந்த ஒரு தடையும் இல்லாமல் நாம் கடைக்கு சென்றால் பார்ப்பவை அனைத்தையும் வாங்கி பணத்தை வீணாக்குவோம்.
உங்கள் நேரத்தை சேமியுங்கள்
பொழுதுபோக்கிற்காக நாம் தொலைக்காட்சிகளுக்கு தேவையில்லாமல் பணம் வீனாக்கி வருகிறோம். எனவே அதைத் துண்டித்து பொழுது போக்கை தவிர்த்திடுங்கள். இதனால் உங்கள் நேரமும் மிச்சமடையும், அந்த நேரத்தில் நீங்கள் உபயோகமுள்ள ஏதாவது செயலை செய்யலாம். நாம் எங்கேயாவது பயணம் செலவு செய்யும்போது நம் தொலைபேசியிலேயே நம்முடைய பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்:
வங்கிகளில் 10 வருடம் அல்லது 20 வருடம் என சேமிப்பு கணக்குகளை தொடங்குங்கள். அதே போல் உங்கள் முதுமை காலங்களில் வரவிருக்கும் உதவித் தொகையையும் சரியாக பயன்படுத்துங்கள். நிலம், நகை போன்றவைகளினால் பணத்தை முதலீடு செய்யுங்கள். இது உங்களுக்கு எப்போதும் கை கொடுக்கும். How To Save Money and Money Savings Habits. சிறு சேமிப்பிற்கான சிறந்த திட்டமிடல்.
பணத்தை முடிந்த வரை சேமித்து ஏதாவது நல்ல முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது தொழில் செய்து பணத்தை சேமித்து ஒன்றாக திட்டமிடுவது சிறந்தது. இதனால் உங்கள் எதிர்காலம் வளமாக அமையும்.
பணத்தை சேமிக்க சில வாழ்க்கை மாற்றங்கள் தேவை:
ஆங்கிலத்தில் Delayed Gratification என்ற ஒரு கருத்து உண்டு. 1960-ஆம் ஆண்டுகளில் Stanford பல்கலைக்கழகத்தில் Walter Mischel என்ற ஆய்வாளர், The Marshmallow Experiment என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். அந்த ஆராய்ச்சியை சுருக்கமான முறையில் இவ்வாறு செய்யலாம்.
அதாவது, ஒரு பூட்டப்பட்ட அறையில் ஒரு சிறுவனை உட்காரவைத்து, அவர்களின் முன்பு ஏதாவது ஒரு வகையான இனிப்புப் பொருளை வைக்க வேண்டும் (EX.சாக்லேட்). பின்பு அவர்களுக்கு இரண்டு வகையான தேர்வுகளை கொடுக்க வேண்டும். வைக்கப்பட்ட சாக்லேட்டை உடனடியாக சாப்பிடலாம் அல்லது 15 நிமிடங்கள் அந்த சாக்லேட்டை தொடாமல் இருந்தால், இரண்டு சாக்லேட்டுகள் கிடைக்கும்
பின்பு இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த சிறுவனின் வாழ்க்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இப்படி செய்யப்பட்ட வால்டர் மிஸ்செலின் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு இதுதான் 15 நிமிடங்கள் பொறுமையாக இருந்து, இரண்டு சாக்லேட்டுகள் வாங்கும் சிறுவன், சாக்லேட்டை உடனே சாப்பிடும் சிறுவனை விட வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்தனர். வால்டர் மிஸ்செளின் ஆராய்ச்சி நம்மை போன்ற பெரியவர்களுக்கும் பொருந்தும் என்று சொன்னால் மிகையாகாது. என்ன, பலகாரம், சாக்லேட் என்று இல்லாமல், நம் கவனத்தை சிதறடித்து, நம்முடைய பணப்பையை ஈர்க்கும் வஸ்துகள் பல.
செலவுகளை குறைத்து, பணத்தை பெருக்க போகும் வழிகள்:
நீங்கள் எப்போதாவது 'ஷாப்பிங்' செய்வதற்கு முன்பு 'நான் இந்த காசை இங்கு வீணடிக்காமல் PF அல்லது Mutual Fund-ல் சேர்த்து வைத்தால் வருங்காலத்தில் எவ்வளவு தேறும்?' என்று யோசித்து பார்த்தது உண்டா?
நிதியியலில் Present Value என்ற ஒரு கருத்து உண்டு. அதாவது, வருங்காலத்தில் நீங்கள் சம்பாதிக்க போகும் பணத்தின் இன்றைய மதிப்பே Present Value. ஒரு உதாரணம்:
நீங்கள் Flipkart -ல் Big Billion Day அன்று ₹5,000 செலவு செய்ய உள்ளீர்கள். இதே நீங்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தால், 15% வட்டி கிடைக்கும்.நீங்கள் இன்னும் 30 வருடங்களுக்கு சேமிப்பு செய்யலாம்.
இந்திய அரசின் 30-வருட பத்திரத்தின் வட்டி 7.79%.
ஆகையால், நீங்கள் அந்த ₹5,000-ஐ, செலவு செய்யாமல் சேமித்து வைத்தால், அதன் இன்றைய மதிப்பு ₹5000×(1.15)30(1.0779)30 ஆகும்.
அதாவது, ₹34,878 ஆகும்.
ஆக, குத்துமதிப்பாக 7 மடங்கு.
இந்த எடுத்துக்காட்டில், ஒரு நிமிடம் பொறுமையாக யோசித்து, உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி: "இன்று ஒரு நாளில் நான் ₹34,878 செலவு செய்ய தயாராக இருக்கிறேனா? நான் வாங்கும் பொருட்கள் ₹34,878 செலவு செய்யும் அளவுக்கு தேவயானவையா?"
இப்படி, உங்களின் ஒவ்வொரு செலவையும் 'இன்றைய மதிப்பு' அல்லது '7 மடங்கு' என்ற அளவு கோளில் அளந்து பார்க்கலாம். புத்தம் புதிதாக இருக்கும் அந்த Reebok காலணியின் விலை ₹10,000 இல்லை, ₹69,756. Chennai Super Kings - (Royal Challengers கிரிக்கெட் போட்டியின் சீட்டு விலை ₹2,000 இல்லை, ₹13,951. Swiggy -இல் நீங்கள் வாங்கப்போகும் Burger -இன் விலை ₹350 இல்லை, ₹2,441.
இப்படி செய்து பார்த்த பின்னரும், உங்கள் செலவு நியாயமானதாக பட்டால், தாராளமாக செலவு செய்யுங்கள். ஆனால், அந்த கேள்வியை ஒவ்வொரு முறையும் கேட்பது மிகவும் அவசியம். இந்த ஒரு வாழ்க்கை முறை மாற்றம், உங்களின் சொத்தை மறைமுகமாக பல்கி, பெருக்கும்.
முடிவு உங்கள் கையில் தான்:
சேமிப்பு என்பது ஒரு கலை. சிறுக சிறுகச் சேர்த்து பெருக வாழ்ந்தோரும் உண்டு. சேமிப்பு என்ற பெயரில் தங்களது சொந்தத் தேவைகளைக் கூட சுருக்கிக்கொண்டு சுக தூக்கங்களை மறந்துவிட்டு " கஞ்சன் " என்ற பெயருடன் சொந்தங்களை தொலைத்துவிட்டு இறுதி நேரத்தில் எடுக்க பிடிக்க ஆளின்றி அனாதையாய் போய்ச் சேர்ந்தோரும் உண்டு. அதனால் சேமிப்பு என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எதிர்கால நிம்மதிக்காக இன்றய நிகழ்கால வாழ்க்கையினை பாதிப்பில்லாமல் சரியான திட்டமிடலுடன் செயல்மட்டால் நிச்சயம் வாழும் நாட்களும் வாழப்போகும் எதிர்காலமும் சொர்க்கமாக அமையும்.