What Is Fundamendal Analysis And Using To Find A Good Stock's In Tamil?

Fundamental Analysis என்பது ஒரு நிறுவனத்தின் மொத்த செயல்பாடுகள் பற்றியும் இலாபம் மற்றும் நஷ்டத்தினை பற்றியும் முழுமையாக அறிவதற்கு பயன்படும் கணக்கியல் முறை ஆகும். ஒரு நிறுவனத்தின் நம்பத்தகுந்த செய்திகள் கொண்டு கணக்கிடப்படும் பலவிதமான குறியீடுகள் தான் Fundamental Analysis எனப்படும்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு Fundamental Analysis செய்து பங்குகளை வாங்குவதன் மூலம் இலாபம் பெறலாம் அல்லது நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த வகை Analysis எவ்வாறு கணக்கிடலாம் என காணலாம். 
                         

EPS Earning Per Share:

ஒரு நிறுவனத்தை பற்றியோ அதன் வருவாயோ அல்லது பங்குகளின் எண்ணிக்கையை உங்களால் கணிக்க முடியாது. ஒவ்வொரு நிறுவனத்தின் லாபத்தினை அறிய EPS மூலம் அறியலாம். ஒரு நிறுவனம் ஈட்டும் லாபம் அதன்  பங்குகள் மதிப்பின் மூலம் EPS கணக்கிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க எண்ணினால் கடந்த 5ஆண்டுகளில் EPS  அதிகரித்து வந்தால் அது நல்ல நிறுவனமாகும்.

PE Ratio:

ஒரு பங்கின் தற்போதைய விலையை அதன் அதன் EPS ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு தொகையே PE Ratio எனப்படும். உதாரணமாக:  A என்ற நிறுவனத்தின் பங்கின் விலை 100₹ அதன் EPS - 5 என வைத்து கொண்டால்
PE Ratio = 100/5 => 20 ஆகும். 

பொதுவாக ஒரு நிறுவனத்தின் PE Ratio குறைவாக இருந்தால் அப்பங்குகளை வாங்கலாம். ஒரு துறைசார்ந்த பங்குகளில் மிகவும் குறைவான PE Ratio இருந்தால் அது நல்ல நிறுவனமாக கருதலாம்.

Book Value:

ஒரு நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு மற்றும் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த சொத்து மதிப்பு  Book Value ஆகும். 

Balance Sheet:

ஒரு நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அதன் மொத்த பங்குகளின் மதிப்பு மற்றும் அந்நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு இவற்றை தெளிவாக விளக்கும் அறிக்கை தான் Balance Sheet எனப்படும்.  இது நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகளின் படி மாறக்கூடியது.

Net Worth:

ஒரு நிறுவனத்தின் மொத்த செலவுகள் கடன்கள் ஆகியவை போக வருமானத்தில் எவ்வளவு இருக்கின்றதோ அதுதான் அந்நிறுவனத்தின் Net Worth ஆகும். 

Swot Analysis:

ஒரு நிறுவனத்தின் Strength, Weakness Opportunities போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் எதிர்கால செயல்பாடுகள் அடிப்படையில் கணக்கிடும் முறையே Swot Analysis ஆகும். 


Divident Yield:

ஒரு நல்ல நிறுவனம் தொடர்ந்து இலாபத்தில் செயல்பட்டு வந்தால் அந்த நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை நிறுவனத்தின் முகமதிப்பு ( Face Value ) அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அடிப்படையில் நிறுவனம் Divident வழங்கும். 

A என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1000 ₹ அதன் Face Value 10 எனில் நிறுவனத்தால் ஒதுக்கப்படும் Divident  சதவீதம் 50% எனில் Divident ஆனது  10×50/100 = 5 ரூபாய். 

நிறுவனத்தின் முழு விவரம்: 

நீங்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் அந்த நிறுவனத்தனை பற்றி முழுவதும் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் உள்ளதா மற்றும் அதன் எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என அறிந்திருக்க வேண்டும். 

நிறுவனத்தின்  உண்மையான Website சென்று அதன் விவரங்களை அறிய வேண்டும். நிறுவனத்தின் கடன் மற்றும் சொத்துக்கள் எவ்வளவு நிறுவனத்தின் இலாபம் நிறுவனம் செலுத்தும் கடனுக்கான வட்டி ஆகியவற்றினை பற்றிய முழு விவரம் தெறிந்து கொள்ள வேண்டும். நிறுவனம் தயாரிக்கும் பொருட்கள் என்ன அது எதிர்காலத்தில் பயன்படும் தயாரிப்பு தானா என்று அறிந்து கொள்ள வேண்டும். 

நிறுவனத்தின் போட்டியாளர்கள்: 

ஒரு நல்ல நிறுவனத்தினை தேர்ந்தெடுப்பதற்கு முன் நீங்கள் அந்த நிறுவனதின் போட்டியாளர்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட பொருளை தயாரிக்கும் நிறுவனங்களில் நல்ல நிறுவனத்தினை தான் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கினால் இலாபமும் கிடைக்கும். அதன்படி ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் மட்டும் இல்லாமல் போட்டியாளர்களையும் அறிந்திருக்க வேண்டும். 

உதாரணம்: Airtel, Jio & Vodafone idea
போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் போட்டிகள் உண்டு. ஆனால் Reliance Industrie நிறுவனம் பெட்ரோல் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனம் மற்றும் போட்டிகள் இல்லாமலும் நல்ல நிலையில் செயல்படும் நிறுவனம் ஆகும்.

சர்வதேச சந்தை நிலவரம்: 

நீங்கள் உண்மையில் ஒரு நல்ல நிறுவனத்தினை கண்டறிந்த பின்னர் ஒரு பங்கினை வாங்க நினைத்தால்  சந்தை நிலவரத்தினை பற்றி அறிந்திருக்க வேண்டும். சர்வதேச சந்தை நிலவரத்தினை பொருத்து பங்கின் விலை மாறக்கூடும். அதனால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், பணவீக்கம், வட்டி விகிதம் உற்பத்தி திறன் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். நாட்டின் உள்னாட்டு உற்பத்தி குறைவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையல் இருந்து வெளியேறுதல் போன்ற காரணங்களால் சந்தை மதிப்பு மற்றும் பங்கின் விலை குறையக்கூடும்.