நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடிவு செய்த பின் நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை என்றால் அது ஒரு பங்கை தேர்வு செய்வது தான்.எந்த பங்கை தேர்ந்தெடுப்பது என்பதில் நமக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று. தேர்வு செய்ய ஏராளமான பங்குகள் உள்ளன.அதற்கான பல்வேறு வழிமுறைகளை காணலாம்.
நிறுவனங்கள் குறித்து தேடும் போது எப்படி தேட வேண்டும் என்று தெரியவில்லை என்றால் வர்த்தகத்தை தொடங்குவதற்கு ஒரு தடையாக இருக்கும். சில பொதுவான ஆபத்துக்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும் சிறந்த முதலீடுகளை கண்டறிய உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
முதலீட்டாளராக ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால் அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்ன பொருள் உற்பத்தி செய்கிறது. அது செயல்படும் தொழில் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நிறுவனத்தின் அறிக்கைகள் செய்தி வெளியீடுகள் தரகர் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை பயன்படுத்தி கணக்கீடுகள் மூலம் பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.
நிறுவனத்தின் அடிப்படை:
நிறுவனம் அடிப்படையில் நல்ல நிலையில் இருந்தால் அதன் தயாரிப்புகள் சேவைகள் எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றை பற்றி மேலும் அறிய வேண்டியது அவசியம் இல்லை. நிறுவனம் கடந்தகால செயல்திறன் அதன் உற்பத்தி வளர்ச்சி ஆகியவன அடிப்படையிலும் பங்குகளை தேர்வு செய்யலாம்.
#Earning Per Share ( EPS ) :
ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு அதன் வளர்ச்சி விகிதத்தினை குறிப்பதே EPS ஆகும். இது கடந்த 5ஆண்டுகள் நல்ல வளர்ச்சி கண்டு இருக்க வேண்டும். அத்தகைய பங்குகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
#Price To Earning Ratio ( P/E Ratio ):
ஒரே துறையில் உள்ள மற்ற நிறுவன பங்குகளுடன் ஒப்பிடும் போது இந்த P/E Ratio குறைவாக இருக்க வேண்டும்.
#Price To Book Ratio ( P/B Ratio ):
இதுவும் ஒரே துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது P/B Ratio குறைவாக இருக்க வேண்டும்.
#Debt To Equity Ratio:
1% குறைவாக இருக்க வேண்டும் அல்லது முன் உரிமை கடன் 0.5% ஆக இருக்க வேண்டும். பூஜ்ஜிய கடனாக இருந்தால் சிறப்பான நிறுவனமாகும்.
#Return On Equity ( ROE ):
ROE என்ற அளவு 20% அளவிற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
#Price To Sales Ratio ( P/S Ratio ):
P/S Ratio ஆனது மிகச்சிறய அளவாக இருக்க வேண்டும்.
#Curent Ratio - இது 1% அதிகமாக இருக்க வேண்டும்.
#Dividend - கடந்த 5ஆண்டுகளாக உயர்ந்த அளவில் இத்தொகை இருக்க வேண்டும்
( மேலே உள்ள அனைத்து தரவுகளும் நிறுவனத்தின் Balance Sheet -ல் இருக்கும். நிறுவனத்தின் உன்மையான website அல்லது BSE website - ல் இருக்கும் Balance Sheet - காண்பது மூலம் நிறுவனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பங்குகளின் விலை எதனால் பாதிப்படைகிறது:
நிறுவனத்தின் பங்கு விலை எதன் அடிப்படையில் நகர்கிறது எப்படி செயல்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் பங்குவிலை நகர்விற்கு பின்னால் இருக்கும் காரணிகளை நிறுவனத்தின் அறிக்கைகளின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்த பின்னும் அதன் பங்கு விலை குறைந்தால் புதிய வர்த்தகர்கள் குழப்பமடைகின்றனர். ஏனெனில் சந்தை ஆய்வாளர்கள் கணித்த இலாபம் வரவில்லை அல்லது அடுத்த நிதி ஆண்டிற்கான லாபம் குறைய கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பங்குகளின் விலையானது குறைய வாய்ப்புகள் அதிகம்.நிச்சயமாக பங்குகின் விலைகள் குறைய வாய்ப்புகள் அதிகம். அதற்கு பல காரணிகள் உள்ளன. முதலீட்டு முடிவுகளை எடுக்கும் போது முன்னோக்கு அறிக்கைகள் பற்றி புரிந்து கொள்வது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த பொதுவான தவறுகளை தவிர்க்கவும்:
பங்குகளின் அடிப்படை வருவாய் பணப்புழக்கம் கடன்ஆகியவற்றினை தவிர முதலீட்டாளர்கள் பொதுவான சில குறிப்புகளில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
* ஏதாவது நிறுவனத்தினை பற்றிய ஒரு நல்ல செய்திகள் வர தொடங்கினால் பங்கின் விலை ஏறத்தொடங்கும். இத்தகைய நிகழ்வு
அடிக்கடி சந்தையில் நிகழும் இதன் காரணமாக நாம் அந்த பங்குகளை வாங்க கூடாது.பங்குகளை வாங்கும் போது அதன் நிலைத்தன்மையை மட்டும் பார்த்து வாங்க வேண்டும்.
* மிக அதிக #Dividend தருவதாக அறிவித்தால் அப்பங்குகளை வாங்க வேண்டாம்.இது பெரும்பாலும் முதலீட்டாளர்களின் எதிர்மறையான செயல்களால் பங்கின் விலை வீழ்ச்சியடைய கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
* Face Value -ன் மதிப்பை கொண்டு அதன் வருவாய் வளர்ச்சியினை கணக்கிட வேண்டாம். ஏனென்றால் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஏதேனும் ஒரு பெரிய முதலீடு அல்லது மற்றொரு நிறுவனத்தினை கையகப்படுத்தி இருந்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருப்பதாக காட்டப்படும்.
நிர்வாகத்தினை பற்றி அறிதல்:
இந்திய பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடுகள் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல நிர்வாகம் தான் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும். நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்றால் அந்த நிறுவனம் கண்டிப்பாக நஷ்டத்தினை சந்திக்கும். ஆகையால் ஒரு பங்கை வாங்கும் முன் நிர்வாகம் மற்றும் உரிமையாளரை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
உதாரணமாக :
Sintex Plastic என்ற அனைவரும் அறிந்த ஒரு நல்ல நிறுவனம்
Sep-ல்2017 இப்பங்கு 93ரூ . ஆனால் March- 2020- ல் இப்பங்கு 0.75 பைசா .
பங்கை தேர்வு செய்தல்:
முதலீடு செய்ய ஒரு பங்கை தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய புள்ளிகள் இவை.
• நிறுவனத்திற்கு நல்ல அடிப்படைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
• நிறுவனம் வழங்கும் சேவைகள் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதா என கான வேண்டும். EX: Colgate, ITC, HUL
• எதிர்காலத்தில் மக்கள் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை பயன்படுத்துவார்களா என்று அறிய வேண்டும்.ஏனென்றால் Kodak Flim Role Camara என்ற ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
• நிறுவனத்திற்கு குறைந்த கடன் மட்டுமே உள்ளதா என்றும் அதன் நிர்வாக திறனை பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
• குறிப்பாக நிறுவனத்திற்கு குறைவான போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனரா என்று அறிந்து கொள்ளுங்கள்.