பங்குச்சந்தை நிலையற்றதாக மாறும் போது முதலீட்டாளர்கள் பதற்றமடைகின்றனர். பல நேரங்களில் பங்குகளில் இருந்து வெளியேறி பணமாக தங்கள் கைகளில் வைத்திருக்கின்றனர்.பணம் கைகளில் இருக்கும் போது பலர் பாதுகாப்பானதாக உணர்கின்றனர். ஆனால் அது உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானது?
உங்கள் பணம் கைகளில் இருக்கும் போது பாதுகாப்பானதாக உணரலாம் உண்மையில் பணவீக்கம் வாங்கும் திறனை குறைக்கின்றது. காலப்போக்கில் பணத்தின் மதிப்பையும் குறைக்கின்றது. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு பங்குகளின் வருவாயை பாதிக்கும் அதனால் உங்கள் #Portfolio -வை மாற்றி அமைப்பதும் முக்கியமாகும்.
இங்கு நாம் செய்யும் பெறிய தவறுகள் என்ன என்றால் சந்தை நல்ல நிலையில் இருக்கும் போது அதிக விலைக்கு வாங்குவதும் இறக்கம் அடையும் போது சந்தை மீதான பயத்தினால் விற்றுவிட்டு வெளியேறிவது சரியான செயல்கள் கிடையாது.
நீங்கள் உங்கள் பங்குகளை சந்தை இறங்கும் போது விற்றுவிட்டு பணமாக கைகளில் வைத்து இருக்கிறீர்கள் என்றால் சந்தை ஏற்றம் கானும் போது பங்குச்சந்தையில் தான் மறுமுதலீடு செய்வீர்கள். நீங்கள் எப்போது இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சந்தையில் எப்போது நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் எப்பொழுது வெளியேற வேண்டும் என்றும் நாம் முன்னறே முடிவுகள் எடுக்க வேண்டும். நீண்ட கால முதலீடுகள் என்று வரும்போது கால இலக்கினையும் முடிவு செய்வது தான் நல்ல முதலீட்டாளராக இருக்க முடியும்.
பணத்தை கைகளில் வைத்திருப்பது சில சந்தர்ப்பங்களில் சில நன்மைகள் உண்டு. பங்குச்சந்தை வீழ்ச்சின் போது பணமாக வைத்து இருப்பது மேலும் இழப்புகளை ஏற்படுத்தாமல் இருக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தை வீழ்ச்சியடையாவிட்டாலும் அது வீழ்ச்சியடைய கூடிய சாத்தியக்கூறுகள் எப்போதும் உண்டு.
பணம் உண்மையில் இனிமையானது. அது கைகளில் இருக்கும் போது நாம் அதை விவரிக்க வேண்டியது இல்லை.சந்தை வீழ்ச்சியடையும் போது உங்கள் உங்கள் பங்கின் மதிப்பானது குறைந்து கொண்டே செல்லும். ஆனால் உங்கள் கைகளில் இருந்தால் இழப்பை தடுக்க முடியும். இருப்பினும் இது குறுகிய காலத்திற்கு பாதுகாப்பானதாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டு திட்டத்திற்கு இலாகரமாக இருக்காது.
இழப்பானது உண்மையில் இழப்புகள் கிடையாது:
உங்கள் பணம் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு இருந்தால் பங்குச்சந்தை வீழ்ச்சியடையும் போது பணத்தை இழப்பது போல் உணரலாம். ஆனால் அது காகித வடிவில் உள்ள இழப்புகள் மட்டுமே சந்தித்துள்ளீர்கள். இருபினும் நீங்கள் பங்குகளை விட்டு வெளியேறினால் காகித வடிவில் உள்ள இழப்புகளை உண்மையான பண இழப்புகளாக மாற்றுகிறீர்கள் என்று அர்த்தம். காகித இழப்புகள் நன்றாக இல்லை என்றாலும் நீண்டகால முதலீட்டாளர்கள் இதை ஏற்றுக்கொள்கின்றனர்.
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும் போது நீங்கள் உங்கள் Portfolio-வை மாற்றி அமைத்துக்கொள்வது சந்தையானது மீண்டும் எழும்போது உங்களுக்கு நல்ல இலாபத்தினை கொடுக்க கூடியதாகும்.
பணவீக்கம் ( #Inflation ) ஒரு கொலைகாரன்:
உங்கள் கைகளில் அல்லது வங்கிகளில் பணமாக வைத்திருப்பது இழப்புகளை குறைப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கலாம். ஆனால் உண்மையில் பணவீக்கமானது நமது பணத்தின் மதிப்பை மறைமுகமாக குறைத்துக்கொண்டு இருப்பதையும் மறந்து விடாதீர்கள். பணவீக்கத்தின் போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்கள் உயருகின்றன.
உங்கள் பணம் கைகளில் இருக்கும் போது பாதுகாப்பானதாக உணரலாம் உண்மையில் பணவீக்கம் வாங்கும் திறனை குறைக்கின்றது. காலப்போக்கில் பணத்தின் மதிப்பையும் குறைக்கின்றது. பணவீக்கம் நீண்ட காலத்திற்கு பங்குகளின் வருவாயை பாதிக்கும் அதனால் உங்கள் #Portfolio -வை மாற்றி அமைப்பதும் முக்கியமாகும்.
அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பது:
இங்கு நாம் செய்யும் பெறிய தவறுகள் என்ன என்றால் சந்தை நல்ல நிலையில் இருக்கும் போது அதிக விலைக்கு வாங்குவதும் இறக்கம் அடையும் போது சந்தை மீதான பயத்தினால் விற்றுவிட்டு வெளியேறிவது சரியான செயல்கள் கிடையாது.
நீங்கள் உங்கள் பங்குகளை சந்தை இறங்கும் போது விற்றுவிட்டு பணமாக கைகளில் வைத்து இருக்கிறீர்கள் என்றால் சந்தை ஏற்றம் கானும் போது பங்குச்சந்தையில் தான் மறுமுதலீடு செய்வீர்கள். நீங்கள் எப்போது இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சந்தையில் எப்போது நுழைய வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் எப்பொழுது வெளியேற வேண்டும் என்றும் நாம் முன்னறே முடிவுகள் எடுக்க வேண்டும். நீண்ட கால முதலீடுகள் என்று வரும்போது கால இலக்கினையும் முடிவு செய்வது தான் நல்ல முதலீட்டாளராக இருக்க முடியும்.
நல்ல முதலீட்டாளராக இருக்க வேண்டும்:
சந்தை ஏற்றம் கானும் போது பங்குகளின் மதிப்பானது உயரும் போதும் மகிழ்ச்சியடைய வேண்டாம். ஏனென்றால் அது தொடர்ந்து ஏற்றம் கானும் என்று எதிர்ப்பார்க்க வேண்டாம். அதைப்போன்றே சந்தையானது இறக்கம் கானும் போது கவலை அடையவும் வேண்டாம். அது என்றென்றும் வீழ்ந்து கொண்டே இருக்கும் என்று எண்ணவும் வேண்டாம்.இரண்டு எதிர்ப்பார்ப்புகளும் தவறான சிந்தனைகளை குறிக்கின்றன. பங்குச்சந்தையானது இருவழிகளிலும் பயனிக்க கூடியது என்று புரிந்து கொள்ளுங்கள்.
பங்குச்சந்தையில் நீண்ட காலம் முதலீடுகள் செய்பவர்கள் தான் முதலீட்டாளர்கள் ஆவர். சந்தை ஏற்ற இறக்க காலங்களில் நாம் நமது #Portfolio-வை மாற்றி அமைப்பது முக்கியமானதாகும். நல்ல பங்குகளை நீண்டகாலத்திற்கு முதலீடுகள் செய்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.