பங்குச்சந்தை முதலீடு என்பது எளிதான சம்பாத்தியத்திற்கான வழியல்ல. ஒரு பங்கு முதலீட்டாளராக நீங்கள் உங்கள் பணத்திணை வளர்பதற்கான வழிகளை பற்றி எண்ணிக்கொண்டு இருக்கலாம். இதில் மிகவும் முக்கியமான ஒன்று நீங்கள் கடினப்பட்டு சம்பாத்திய பணத்தை இழக்காத வகையில் இருக்கும் முதலீடுகளாக இருக்க வேண்டும்.
நீண்டகால முதலீடுகள் மட்டுமே செல்வத்தினை உருவாக்குவதற்கான சிறந்த பாதையாக இருக்கின்றன. முதலீட்டின் மீதான மதிப்பானது மேலும் மேலும் உயரும் போது மட்டுமல்லாமல் சந்தை இறங்கும் போதும் பொருமையாக இருக்க வேண்டும்.பங்குச்சத்தை முதலீடு என்பது ஒரு நீண்ட மரத்தான் ஓட்டப்பந்தையம் போன்றது. ஒரே இரவில் ஒரே நாளில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தினை கைவிடவேண்டும். பங்குச்சந்தையில் கவணமாக திட்டமிட்டு சரியான பங்கை தேர்வு செய்ய வேண்டுமே தவிர உணர்ச்சிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய கூடாது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் எதிர்கால வளர்ச்சிகளை பற்றி அறியாமல் எந்தவித பங்குகளையும் தேர்வு செய்ய கூடாது. நீங்கள் முதலீட்டின் மீதான லாபத்தினை பற்றி மட்டும் நினைக்காமல் நம் முதலீடு செய்யும் தொகை திருப்பி கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும்.
சந்தை பற்றிய புரிதல் முக்கியம்:
நாம் பணத்தை முதலீடு செய்யும் முன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சந்தை பற்றிய புரிதல் முக்கியம்.சந்தையின் ஏற்ற இறக்கங்கள் சுழற்சிகள் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும். இல்லை என்றால் பணத்தை இழக்கவேண்டி வரும். பொருளாதார சுழற்சிகளின் போது சந்தை ஏற்றங்கள் இறக்கங்கள் வரும் நீண்ட கால முதலீட்டாலர்களாக இருந்தால் சந்தை இறங்கும் போது பங்கை வாங்க வேண்டும். சந்தை ஏற்ற காலத்தில் விற்காமல் வைத்திருக்க வேண்டும்.
நிறுவனத்தின் எதிர்காலத்தினை ஆராயவும் :
ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு நாம் அந்த நிறுவனத்தின் பளைய தரவுகளை மட்டும் பார்க்க கூடாது. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்கள் எவ்வாறு செயல்படும் என்று கணிக்க வேண்டும். ஏனென்றால் Kodak Film Camera என்ற நிறுவனத்தை நினைத்து பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் உச்ச நிலையில் இருந்த நிறுவனம் இன்று அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
உணர்ச்சிகளால் சந்தைகளில் முதலீடுகள் செய்ய வேண்டாம்:
சில முதலீட்டாளர்கள் அடிப்படை காரணங்களை விட்டுவிட்டு பங்குகளின் மீதான நம்பிக்கை மற்றும் உணர்வுகளால் பங்குகளை வாங்குகின்றன. ஆனால் அது அதீத இழப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். சந்தை அதிகரிக்கும் போது ஆர்வத்தினால் வாங்கி குவிப்பதும் சந்தை இறக்கத்தின் போது விற்று விட்டு வெளியேறுவதும் தவறான செயலாகும். எப்பொழுதும் நீண்டகால முதலீட்டாளர்கள் சொந்த கணக்கீடுகளின் மூலம் நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து நீண்ட காலங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
இலாப இலக்குகளை குறைத்துக்கொள்ள வேண்டும்
( Don't hurry up in booking profit )
சில நேரங்களில் சந்தை திடீரென உயரும் போது ஏற்படும் சிறிய லாபத்தனை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுவது முட்டாள் தனமான செயலாகும். நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் கணிதாலும் பங்கு மதிப்பானது அதிகரிக்கும் அல்லது நாட்டின் எதிர்கால பொருளாதார புள்ளி விவரங்கள்
( GDP ) அதிகரிக்கும் என்றாலும் பங்குகள் உச்ச நிலையை அடையும் இத்தகைய நேரங்களில் பங்குகளை விற்காமல் வைத்திருக்க வேண்டும்.
Evaluate your portfolio regularly - மதிப்பீடுகளை தொடர்ந்து செய்யவும்:
உங்கள் portfolio-வை குறிப்பிட்ட கால இடைவேளையில் ஆய்வு செய்யவும். சரியாக செயல்படும் பங்குகளை வைத்திருக்கவும். சில பங்குகளின் செயல்பாடுகள் குறைந்திருந்தால் விற்றுவிட்டு புதிய நல்ல பங்குகளை வாங்குவது நல்லதாகும். பங்குகளை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருப்பது மன அழுத்தம் ஏற்பட அல்லது சந்தையில் ஏற்ற இறக்கத்தை கண்டு முதலீடுகள் செய்யும் ஆர்வத்தை குறைக்க வழி வகுக்கும். அதிகமான லாபம் கிடைப்பதற்காக மட்டும் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரகால நிதியினை சந்தைகளில் முதலீடுகள் செய்வது ஆபத்தை உண்டாக்கிவிடும்.
தொடர்ந்து முதலீடு செய்யவும்:
சந்தையானது எப்பொழுதும் ஏற்றபாதையில் இருந்து கொண்டு இருக்காது ஏற்ற இறக்கங்களை கொண்டதே பங்குச்சந்தை ஆகும். சந்தையானது ஏற்றம் கானும் போது பங்குகளை வைத்திருப்பதும். சந்தை இறங்கும் பொழுது தொடர்ந்து முதலீடு செய்பவர்களே சிறந்த முதலீட்டாளர்கள். ( தொடர்ந்து முதலீடு செய்வது தான் அதிக லாபத்தினை கொடுக்கவள்ளது )
Asset allocation - பல்வேறு வகைகளில் முதலீடகளை மேற்கொள்ளுங்கள்:
உங்கள் மொத்த சேமிப்பையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்கள். குறிப்பிட்ட சதவீத பணத்தினை சிறந்த முறையில் முதலீடு செய்ய 100-ல் இருந்து உங்கள் வயதினை குறைத்தால் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பணத்தின் அளவு தெரிந்து விடும்.
உதாரணமாக உங்கள் வயது 25 எனில் 100-25=75 . இதில் நீங்கள் உங்கள் மொத்த சேமிப்பு பணத்தில் 75% -தினை பங்குகளில் முதலீடுகளில் முதலீடு செய்யலாம். மீதம் 25% பணத்தினை நிரந்தர வைப்புகளில் முதலீடுகள் செய்யலாம்.
Stop Loss மிக முக்கியம்:
• முதலில் உங்களுக்கென ஒரு Stop Loss வைத்துக்கொள்ளுங்கள். அது தான் முக்கியம்.. Stop Loss என்றால் என்னால் இவ்வளவு ரூபாய் தான் இழக்க முடியும் என்று உங்களிடம் ஒரு தொகை இருக்குமே அது தான்.
• உதாரணமாக: பத்தாயிரம் ரூபாய் பங்குச்சந்தையில் போடுகிறீர்கள் என்றால், அதில் ஆயிரம் ரூபாய் போனால் பரவாயில்லை என்று இருக்குமே அந்த ஆயிரம் தான் உங்கள் Stop Loss. அந்த அளவு இழப்பு வந்தது உடனே கண்ணை மூடிக்கொண்டு விற்றுவிட வேண்டும்.
• Market திரும்ப பழைய நிலைக்கு போகும் என்றெல்லாம் காத்திருக்கக்கூடாது. அப்படி காத்திருப்பவர்கள் தான் நட்டம் அடைகின்றனர்.
• Stop Loss வரையறுத்துக்கொள்வது போல, உங்களுக்கு லாபம் எவ்வளவு வேண்டும் என்பதையும் வரையறுத்துக்கொண்ட பிறகே களத்தில் குதிக்க வேண்டும்.
உதாரணமாக: எனக்கு ஆயிரம் ரூபாய் லாபம் போதுமென்றால், உங்கள் பங்கு ஆயிரம் ரூபாயைத் தொட்ட உடனே விற்றுவிட வேண்டும். அதற்குப் பிறகு உங்கள் பங்கு எத்தனை கோடி ரூபாய் விலை உயர்ந்தாலும் கவலைப்படக்கூடாது. அது நம்மளோடது இல்லை. நமக்கு ஆயிரம் போதும். இந்த மனது ரொம்ப முக்கியம்.
• Market எப்படி போகிறது என்று பாருங்கள். உதாரணமாக Market ஏறும்போது வாங்க வேண்டும். இறங்கும்போது விற்க வேண்டும். இதை Price action trading என்பார்கள்.
• உங்ககிட்ட இருக்க மொத்த பணத்தையும் போடாதீர்கள். முதலில் 10% போட்டு டெஸ்ட் பண்ணுங்க. அதை இழந்தீர்களென்றால். அடுத்த பத்து, இப்படி கொஞ்சம் கொஞ்சமா இறக்குங்க. அப்ப தான் நீண்ட நாள் ஆட முடியும்.
• Trading என்பது Test Match, 20 - 20 கிடையாது.. இதை மனதில் வைத்து நின்று நிதானமாக ஆடினால் நீண்டகாலத்துக்கு களத்தில் இருக்கலாம்.
நீங்கள் முதலீட்டாளர்கள்:
பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்ய இருப்பவர்கள் மட்டுமே முதலீட்டாளர்கள்.நீண்ட காலத்திற்கு முதலீடுகள் செய்தால் கடினமான காலத்தில் கூட நாம் கவலைகள் இன்றி இருக்கலாம். அமைதியாக இருங்கள் நல்ல லாபத்தினை அடையலாம். நீண்டகால முதலீடும் பொருமையான செயல்பாடுகளும் தான் அதிக இலாபத்தினை அடைவதற்கான வழியாகும்.