அருபா.......


உனக்காக காத்திருக்கிறேன்

எனக்காக நீ வரவேண்டும்

உணர்வற்ற என் இதயம்

உன்னைத் தேடி துடிக்கிறதே



எந்நாளும் என் நினைவுகளில்

உன்னைக் காணும் கனவுகளே

உன்னைத் தேடும் நினைவாலே - என்

உணர்வு நரம்பு தேய்கிறதே



விழியெங்கும் நீராக

வழியெங்கும் உன் நினைவாக

வார்த்தையின்றி பேசுகிறேன்

வாழ்க்கைக்காக ஏங்குகிறேன்



என்னைத் தாக்கும் துன்பங்கள்

என்னில் உறையும் வேளையிலே

உன்னைத் தேடும் நினைவாலே

என்னில் எல்லாம் மறைந்தனவே



அலை கொண்ட கடல் கூட

ஒரு நாளில் வற்றி விடலாம்

உன்னை கொண்ட நினைவலைகள்

ஒரு நாளும் வற்றாதே



உன்னைத் தேடும் இவ்வாழ்நாளில் - என்

உயிர் விட்டு போனாலும் உன்

உணர்வு கொண்ட என் இதயத்தில்

உன் நினைவலைகள் அழியாது